815. வல்லிநுண்ணிடையா ளுமையவடன்னை
மறுகிடவருமத களிற்றினைமயங்க
ஒல்லையிற்பிடித்தங்
குரித்தவள்வெருவல்
கெடுத்தவர்விரிபொழின்
மிகுதிருவாலில்
நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப
நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு
வில்லியைப்பொடிபட
விழித்தவர்விரும்பி
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 7
____________________________________________________
இடையே தங்கி ஓங்கிய வானத்தின்
இருளை முற்றிலும் துரத்தி ஒளி செய்ய, எண்
திசைகளிலும் பரவி நிறைந்த வேதங்களைப்
போற்றும் அந்தணர்கள் நன்மை விளைக்கும்
வேள்விகளைப் புரிய, அவ்வேள்விகளின் ஆகுதியால்
எழும்மணம் மிக்க புகை வானை மறைத்துத் தோன்றும்
வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் பெருமான்
உமையம்மையாரோடு வீற்றிருந்தருள்கின்றார்.
கு-ரை: ஓதத்தில் கரையேறிச்
சங்குகளும் இப்பிகளும் முத்துக்களை ஈன, அவை இருளை
ஓட்ட, அந்தணர்கள் செய்யும் யாகப்புகை ஆகாயத்தை
மறைக்கின்ற வெங்குரு என்கின்றது. இருளை
ஒளியாக்குவன சங்கும் இப்பியும் ஈன்ற முத்துக்கள்
ஒளியான விசும்பை மறைப்பன யாகப்புகை என்பது
கருத்து. பூசுரர் - அந்தணர். புரை - உயர்வு.
7. பொ-ரை: கொடி போன்று நுண்ணிய
இடையினை உடைய உமையம்மை அஞ்சுமாறு வந்த
மதகளிற்றை அது மயங்குமாறு விரைந்து பிடித்து அதனை
உரித்து அம்மையின் அச்சத்தைப் போக்கியவரும்,
விரிந்த பொழிலிடையே அமைந்த அழகிய
ஆலமரத்தின் அடியில் அமர்ந்து சனகாதியர்க்கு
நல்லறங்களை உரைத்து, யோக நிலையில்
ஞானமாத்திரராய் வீற்றிருக்க, திருமால் பிரமர்
தம் கடுஞ்சொற்களால் நலிவுற்று மலர்க்கணை
தொடுத்து யோக நிலையைக் கலைக்க வந்த கரும்பு
வில்லையுடைய காமன் எரிந்து பொடிபடுமாறு
விழித்தவரும் ஆகிய சிவபிரானார் விரும்பி
வெங்குரு என்னும் சீகாழிப் பதியில்
எழுந்தருளியுள்ளார்.
கு-ரை: உமையவள் அஞ்ச, யானையை
உரித்து அவள் அச்சத்தைப் போக்கியவரும்,
ஆலின்கீழ் நால்வருக்கு அறம் உரைத்திருந்தபோது
வருத்தவந்த மன்மதனை எரித்தவரும் ஆகிய இறைவன்
|