பக்கம் எண் :

 75. திருவெங்குரு843


816. பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப்

பலதலைமுடியொடு தோளவைநெரிய

ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே

யொளிதிகழ்வாளது கொடுத்தழகாய

கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங்

கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர்

வேங்கைபொன்மலரார் விரைதருகோயில்

வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 8

817. ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண

வரியொடுபிரமனு மளப்பதற்காகிச்

சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ்

செலவறத்தவிர்ந்தனரெழிலுடைத்திகழ்வெண்

____________________________________________________

இந்நகரில் இருந்தார் என்கின்றது. வல்லி - கொடி. மறுகிட - மயங்க. ஒல்லை - விரைவாக. வெருவுதல் - அஞ்சுதல். திரு ஆல் - கல்லால விருட்சம் நலிந்திடலுற்று - வருந்தி. கருப்பு வில்லி - கரும்பை வில்லாக உடைய மன்மதன்

8. பொ-ரை: நற்குணங்கள் இல்லாத அரக்கனாகிய இராவணன் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தபோது அவன் முடிகள் அணிந்த பல தலைகளையும் தோள்களையும் கால்விரலை ஊன்றி நெரித்த வரும், அவன் பிழை உணர்ந்து வருந்திப் பாடிய அளவில் அப்பொழுதே அவனுக்கு ஒளிபொருந்திய வாளை வழங்கியருளியவரும், அழகிய கோங்கு, செருந்தி, வில்வம், ஊமத்தமலர், கொன்றை ஆகியன விளங்கும் சிவந்த சடைமுடிச் செல்வரும் ஆகிய சிவபிரானார் வேங்கை மரங்களின் பொன்போன்ற மலர்களின் மணம் கமழும் வெங்குரு என்னும் சீகாழித் திருக்கோயிலில் வீற்றிருந்தருள்கிறார்.

கு-ரை: இராவணணை அடக்கி அருள்செய்தவர் இவர் என்கின்றது. பாங்கிலா அரக்கன் - குணமில்லாத இராவணன்.

9. பொ-ரை: கங்கை நதியைச் சடையிற் சூடிய எம் தலைவராகிய சிவபிரானாரின் அடிமுடிகளை அளந்து காணுதற்குத் திருமால் பிரமர்கள் சேற்று நிலத்தைப் பன்றியாய் அகழ்ந்து சென்றும், முடியினைக் காண அன்னமாய்ப் பறந்து சென்றும் தம் செயல் அழிந்தனர்.