பக்கம் எண் :

844திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


ணீறுடைக்கோல மேனியர்நெற்றிக்

கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த

வேறெமையாள விரும்பியவிகிர்தர்

வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 9

818. பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர்

பயிறருமறவுரை விட்டழகாக

ஏடுடைமலராள் பொருட்டுவன்றக்க

னெல்லையில்வேள்வியைத்தகர்த்தருள்செய்து

காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக்

கண்டவர்வெருவுற விளித்து வெய்தாய

வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர்

வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. 10

____________________________________________________

அழகு விளங்கும் வெண்ணீறு பூசிய திருமேனியரும், நெற்றிக்கண்ணரும், விண்ணவர் கைகளால் தொழுது ஏத்த அவர்களை விடுத்து எம்மைச் சிறப்பாக ஆள விரும்பியவரும் ஆகிய அவ்விகிர்தர் வெங்குரு என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியுள்ளார்.

கு-ரை: அயனும் மாலும், விண்ணிலும் மண்ணிலும் தேடச் சென்றும் காணாது போக்கொழிந்தனர்; அத்தகைய நீறுபூசிய மேனியையுடையவர் இவர் என்கின்றது. சேறு இடைபுக்கும், திகழ்வானத்திடைபுக்கும் எனப் பிரித்துக் கூட்டுக. எழில் - அழகு. விண்ணவர் கைதொழுதேத்த எமை வேறு ஆள விரும்பிய விகிர்தர் - தேவர்கள் வணங்க எம்மை வேறாக ஆட்கொள விரும்பிய இறைவன்; என்றது, தேவர்கள் தம் போகத்திற்கு இடையீடு வாராமை குறித்து வணங்குவர்; ஆதலால் அவர்க்கு எளிதில் அருள் வழங்காது, எம்மைச் சிறப்பாக வைத்து ஆள்கின்றார் என்ற நயப்பொருள் தோன்ற நின்றது.

10. பொ-ரை: துன்பங்களைத் தாங்குதலே தவத்தின் அடையாளம் எனக் கருதும் குண்டர்களாகிய சமணர்களும் சாக்கியர்களும் கூறும் அறவுரைகளைக் கருதாது, அழகிய இதழ்களோடு கூடிய தாமரைமலர் போன்றவளாகிய தாட்சாயணியின்பொருட்டு வலிய தக்கன் இயற்றிய அளவிட முடியாத பெரிய வேள்வியை அழித்துப் பின் தக்கனுக்கும் அருள்புரிந்து, காட்டில் காவல் புரியும் நாய்கள் சூழ்ந்து வரவும், கண்டவர் அஞ்சவும், வேடர் பயிலும் சொற்களால் விலங்குகளை