819. விண்ணியல்விமானம்
விரும்பியபெருமான்
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்த
னவின்றவிவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே
பாடியுமாடியும் பயிலவல்லோர்கள்
விண்ணவர்விமானங் கொடுவரவேறி
வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே. 11
திருச்சிற்றம்பலம்
____________________________________________________
விளித்து வேட்டுவக் கோலத்தை
விரும்பி ஏற்ற விகிர்தர் வெங்குரு என்னும்
சீகாழிப் பதியில் வீற்றிருந்தருள்கின்றார்.
கு-ரை: புறச்சமயிகளுடைய பொருந்தா
உரைக்கு அப்பாற்பட்டுத் தக்கன் யாகத்தைத்
தகர்த்து, வேட்டுவ வடிவந் தாங்கிய விகிர்தர்
இவர் என்கின்றது. பாடு - துன்பம். பயில்தரும் மற
உரை - சொல்லுகின்ற கருணையற்ற வார்த்தைகள்.
விட்டு - அவ்வுரைகளுக்கு அப்பாற்பட்டு. ஏடு உடை
மலராள் - தாட்சாயணியாகிய உமாதேவி. தகர்த்து -
அழித்து. விளித்து - அழைத்து.
11. பொ-ரை: வானளாவிய
விமானத்தை விரும்பி, வெங்குரு என்னும் சீகாழிப்
பதியுள் வீற்றிருந்தருளும் பெருமானைப் பற்றி,
அறம் பொருள் இன்பம் வீடு ஆகியவற்றைத்
தெரிவிக்கும் நல்ல நூல்களை அறிந்த
ஞானசம்பந்தன் அருளிய இவ்வுண்மை மொழிகளாகிய
நன்மைகளைத் தரும் இப்பதிகப் பாடல்கள்
பத்தையும், பண்ணிசை யோடும் பக்தியோடும் பாடி
ஆடிக் கூற வல்லவர்கள், தேவர்கள் விமானம்
கொண்டுவர அதன்மிசை ஏறி, அகன்ற அத்தேவருலகை
அடைந்து அரசு புரிந்து, அதன் கண் வீற்றிருப்பர்.
கு-ரை: வெங்குருமேவிய பெருமானைச்
சொன்ன இந்த நலமிகு பத்துப் பாடல்களையும்
பத்தியோடு பாடியும் ஆடியும் பயில வல்லார்,
விண்ணவர்கள் விமானங்கொண்டுவர அதில் ஏறிச்
சென்று விண்ணரசாய் வீற்றிருப்பார் என்கின்றது.
விண்ணியல் விமானம் - ஆகாயத்தை அளாவிய
விமானம். நண்ணிய நூலன் - தானாகவே அடைந்த
வேதத்தை உடையவன். வாய் மொழி - உண்மை உரை.
வியனுலகு - அகன்ற உலகம்.
|