76. திருஇலம்பையங்கோட்டூர்
பதிக வரலாறு:
திருமாற்பேற்றை வணங்கிச்
சிவபெருமான் திருவருள் பெற்றசீகாழிச்
செம்மலார், திருவல்லம் முதலிய தலங்களை
வணங்கிக்கொண்டு பாலாற்றுப்பக்கத்தில்
வடகரையில் உள்ள தலங்களையும் வணங்கத்
திருவுளங்கொண்டு திரு இலம்பையங் கோட்டூரை
அடைந்து வணங்கி ‘மலையினார் பருப்பதம்’ என்னும்
இப்பதிகத்தைப் பாடியருளினார்கள்.
பண் : குறிஞ்சி
பதிக எண்; 76
திருச்சிற்றம்பலம்
820. மலையினார்பருப்பதந்
துருத்திமாற்பேறு
மாசிலாச்சீர்மறைக்
காடுநெய்த்தானம்
நிலையினானெனதுரை தனதுரையாக
நீறணிந்தேறுகந் தேறியநிமலன்
கலையினார்மடப்பிணை
துணையொடுந்துயிலக்
கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும்
இலையினார்பைம்பொழி
லிலம்பையங்கோட்டூ
ரிருக்கையாப்பேணியென்னெழில்
கொள்வதியல்பே. 1
____________________________________________________
1. பொ-ரை: கயிலாய மலையை இடமாகக்
கொண்டுறையும் இறைவன், சீபருப்பதம், துருத்தி,
மாற்பேறு, குற்றமற்ற சிறப்புடைய திருமறைக்காடு,
நெய்த்தானம் ஆகிய தலங்களில் நிலையாக
எழுந்தருளியிருப்பவன். தன் உரைகளை என் உரைகளாக
வெளிப்படுத்தி அருள்புரிபவன். திருநீறு அணிந்து
ஆனேற்றில் மகிழ்வோடு ஏறி வரும் நிமலன்.
அத்தகையோன் ஆண்மான்கள் தம் இளைய
பெண்மான்களோடு துயில்வதும், சோலைகளில் வாழும்
ஆண்மயில்கள் பெடைகளைத் தழுவி அகவுவதுமாய
இலைகள் நிறைந்த பசிய பொழில்கள் சூழ்ந்த
இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக்
கொண்டு என் அழகினைக் கவர்ந்து செல்வது முறையோ?
கு-ரை; சீபருப்பத முதலிய தலங்களில்
எழுந்தருளியிருப்பவனாகிய, என்னுடைய உரைகள்
எல்லாவற்றையும் தனது வாக்காகக்
|