பக்கம் எண் :

 76. திருஇலம்பையங்கோட்டூர்847


821. திருமலர்க்கொன்றையா னின்றியூர்மேயான்

றேவர்கடலைமகன் றிருக்கழிப்பாலை

நிருமலனெனதுரை தனதுரையாக

நீறணிந்தேறுகந் தேறியநிமலன்

கருமலர்க்கமழ்சுனை நீண்மலர்க்குவளை

கதிர்முலையிளையவர் மதிமுகத்துலவும்

இருமலர்த்தண்பொய்கை யிலம்பையங்கோட்டூ

ரிருக்கையாப்பேணியென்னெழில்கொள்வதியல்பே. 2

____________________________________________________

கொண்டவிடையேறிய விமலன் இலம்பையங்கோட்டூரை இடமாகக் கொண்டு என்னலங்கொள்வதழகா? என்று பிரிவினால் வருந்துந்தலைவியின் நிலையை அநுபவித்துப் பேசுகின்றார்கள் திருஞானசம்பந்தப் பிள்ளையார். துருத்தி - திருத்துருத்தி. திருப்பூந்துருத்தி முதலிய தலங்கள். மாசிலாச்சீர்மறைக்காடு என்றது வேதத்தால் வழிபடப்பெற்றமையானும், கதவந்திறக்கவும் அடைக்கவுமாகப் பாடல்பெற்ற சிறப்புடைமையானும் இவ்வடைமொழி வந்தது. நிலையினான் - பிரியாதே பெயராதே உறைபவன்; நித்யவாஸம் செய்பவன் என்பர் வடநூலார். ‘எனதுரை தனதுரையாக’ ஆன்மபோதங்கழனறு, சிவபோதத்தில் நிற்பார் சொல்லுவனயாவும் சிவத்துரையேயாதலின் இங்ஙனம் கூறினார். கலையின் ஆர் மடப்பிணை - கலைமானோடு கூடிய இளைய பெண்மான். துணையொடு - தன் துணையாகிய முற்கூறிய ஆண் மானோடு. கானல் - சோலை - கணமயில் - கூட்டமாகிய ஆண்மயில். ஆலும் - அகவும். இருக்கை - இருப்பிடம். என் எழில் கொள்வது இயல்பே - என்ன ழகைக் கவர்வது இத்தகையீர்க்கு இயல்பாமோ என்றாள். மயிலும் மானும் துணையொடும் பேடையொடும் வதிய, நீர்மட்டும் தனித்திருந்து, காதலித்த அடியாளையும் தனித்திருக்கச்செய்து அழகைக் கவர்வது அழகா? என்று உரைக்கின்றாள். இதனால் சிவத்தோடு இடையறாமல் இருத்தலாகிய அத்துவித பாவனையிற் பிரிந்து இருக்கின்ற ஆன்மா ஒன்றிய காலத்துண்டாகிய சிவானந்தாநுபவத்தாலுண்டான ஒளிகுறைய, அதனை எண்ணி, ஆன்ம நாயகியை வந்தேற்றுக் கொண்ட தேவரீர் இங்ஙனம் இடையறவுபடச் செய்யலாமா என்று வருந்திக் கூறுவதாகிய பேரின்பப் பொருளும் தோன்றுதல் காண்க. இங்ஙனமே ஏனைய திருப்பாடல்கட்கும் கொள்க.

2. பொ-ரை: அழகிய கொன்றை மலர் மாலையை அணிந்தவன். திருநின்றியூரில் எழுந்தருளியிருப்பவன். தேவர்கட்குத் தலைவன்.