பக்கம் எண் :

848திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


822. பாலனாம்விருத்தனாம் பசுபதிதானாம்

பண்டுவெங்கூற்றுதைத் தடியவர்க்கருளும்

காலனாமெனதுரை தனதுரையாகக்

கனலெரியங்கையி லேந்தியகடவுள்

நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய

நீர்மலர்க்குவளைக டாதுவிண்டோங்கும்

ஏலநாறும்பொழி லிலம்பையங்கோட்டூ

ரிருக்கையாப் பேணியென்னெழில் கொள்வதியல்பே. 3

____________________________________________________

திருக்கழிப்பாலையில் குற்றமற்றவனாய் உறைபவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தி அருள் புரிபவன். திருநீறு அணிந்து ஆனேற்றில் மகிழ்வோடு ஏறிவரும் நிமலன். அத்த கையோன் பெரிய தாமரை மலர்களால் மணம் கமழும் சுனைகளில் உள்ள நீண்ட குவளை மலர்கள் இளம் பெண்களின் மதி போன்ற முகத்தில் உலவும் பெரிய கண்களை நிகர்க்கும் இலம்பையங் கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் அழகைக் கவர்ந்து செல்லுதல் முறையோ?

கு-ரை: இதுவும் அதுபோலத் தலைவி கூற்று; திருமலர் என்றது மற்றைய மலர்கட்கு இல்லாத பிரணவ வடிவம் இதற்கு இருத்தலின். கருமலர் - கருநெய்தற்பூ. குவளை இளையவர் மதிமுகத்துலவும் - குவளை போன்ற கண்கள் முழுமதிபோன்ற முகத்து உலாவுகின்ற என்பதாம். கதிர்முலை - வளர்முலை. இருமலர் - பெரியமலர் போன்ற கண்கள்

3. பொ-ரை: பால வடிவோடும், விருத்த வடிவோடும் வரும் பசுபதி எனப் பெறுபவன். முற்காலத்தில் கொடிய கூற்றுவனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள்புரிந்த காலகாலன். தன்னுடைய உரைகளை என் உரைகளாக வெளிப்படுத்தியவன். கையில் விளங்கும் எரியை எந்திய கடவுள். அத்தகைய இறைவன் நீல நிறம் பொருந்திய சிறந்த மலர்கள் பூக்கும் சுனையில் வண்டுகள் பாட நீரில் பூக்கும் குவளை மலர்கள் மகரந்தம் விண்டு மணம் பரப்புவதும், ஏலமணம் கமழும் பொழில்கள் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த என் எழிலைக் கொள்வது முறையோ?

கு-ரை: பாலன், விருத்தன், பசுபதி. காலகாலன், அனலேந்தி எல்லாமவன்; அவன் என் எழில் கொள்வதியல்ே்ப என்கின்றது.