823. உளங்கொள் வாருச்சியார்
கச்சியேகம்ப
னொற்றியூருறையுமண் ணாமலையண்ணல்
விளம்புவானெனதுரை தனதுரையாக
வெள்ளநீர்விரிசடைத்
தாங்கியவிமலன்
குளம்புறக்கலைதுள மலைகளுஞ்சிலம்பக்
கொழுங்கொடியெழுந்தெங்குங்
கூவிளங்கொள்ள
இளம்பிறைதவழ்பொழிலிலம்பையங்கோட்டூ
ரிருக்கையாப் பேணியென்
னெழில்கொள்வதியல்பே. 4
____________________________________________________
வழிபடும் அடியார்கள்
பரிபக்குவத்திற்கு ஏற்ப இத்தகைய வடிவங்களைத்
தான் விரும்பியவாறு பெறுகின்றான் என்பதாம்.
வண்டுபாடக் குவளைகள் மலர்ந்து ஏல
முதலியன நாறும்பொழில் சூழ் கோட்டூர் என்றது,
தலைவியின் பிரிவாற்றாமைமிகுக்கும் சாதனங்கள்
நிரம்பியுள்ளமை குறித்தவாறு.
4. பொ-ரை: உள்ளத்தில்
தியானிப்பவர்களின் முடிமீது விளங்குபவன்
கச்சியேகம்பன். ஒற்றியூர், திருவண்ணாமலை ஆகிய
தலங்களில் விளங்கும் தலைவன். என்னுடைய
உரைகளாகத் தன்னுரைகளை வெளியிடுபவன். கங்கை
வெள்ளத்தைத் தனது விரிந்த சடைமிசைத் தாங்கிய
விமலன். அத்தகையோன். கலைமான்கள் குளம்புகள்
நிலத்தில் பதியுமாறு கால்களை அழுத்தித்
துள்ளவும், மலைகள் அவ்விடங்களில் எழும்பும்
ஒலிகளை எதிரொலிக்கவும், வளமையான கொடிகள்
வளர்ந்த வில்வ மரங்கள் முழுதும் படியவும்
அமைந்துள்ள, இளம்பிறை தவழும் வான் அளவிய
பொழில்கள் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது
இருப்பிடமாகக் கொண்டு அவனைத் தரிசிக்க வந்த
என் எழிலைக் கவர்ந்து கொள்வது நீதியோ!
கு-ரை: தியானிப்பவர்களின்
உச்சியிலுள்ள சகஸ்ரகமலத்தில் இருப்பவன் என்பது
முதல் கங்கைதாங்கிய விமலன் என்பது வரை
கூறப்பெற்ற சிறப்பியல்புடையவன் இவன் என்று கூறி,
இத்தகையவன் என் எழில் கொள்ளலாமா
என்கின்றாள்.
உளங்கொள்வார் - தியானிப்பவர். கலை
குளம்பு உறத்துள கலைமான் குளம்பு பதியத்துள்ள
சிலம்ப - ஒலிக்க. கூவிளங்கொள்ள -
வில்வமரத்தின்மேல் படிய.
|