பக்கம் எண் :

 76. திருஇலம்பையங்கோட்டூர்851


825. மனமுலாமடியவர்க் கருள்புரிகின்ற

வகையலாற்பலிதிரிந் துண்பிலான்மற்றோர்

தனமிலானெனதுரை தனதுரையாகத்

தாழ்சடையிளமதி தாங்கியதலைவன்

புனமெலாமருவிக ளிருவிசேர்முத்தம்

பொன்னொடுமணிகொழித் தீண்டிவந்தெங்கும்

இனமெலாமடைகரை யிலம்பையங்கோட்டூ

ரிருக்கையாப் பேணியென் னெழில்கொள்வதியல்பே. 6

826. நீருளான்றீயுளா னந்தரத்துள்ளா

னினைப்பவர்மனத்துளா னித்தமாவேத்தும்

ஊருளானெனதுரை தனதுரையாக

வொற்றைவெள்ளேறுகந் தேறியவொருவன்

____________________________________________________

6. பொ-ரை: தங்கள் மனங்களில் இறைவனை உலாவச் செய்யும் அடியவர்க்கு அருள்புரிதற் பொருட்டே பலியேற்றுத் திரிபவனேயன்றி உண்ணும்பொருட்டுப் பலி ஏலாதவன். வீடு பேறாகிய செல்வமன்றி வேறு செல்வம் இல்லாதவன். தன்னுடைய உரைகளை என்னுடைய உரைகளாக வெளிப்படுத்தியவன். தாழ்ந்து தொங்கும் சடைமீது இளம் பிறையைத் தாங்கியுள்ள தலைவன். அத்தகையோன் தினைப்புனங்களில் பாய்ந்து வரும் அருவிகள் அரிந்த தினைத்தாள்களில் ஒதுங்கிய முத்து பொன் மணி முதலியவற்றைக் கொழித்துக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் சேர்க்கும் கரைகளோடு கூடிய வயல்களை உடைய இலம்மையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கொள்வது முறையோ?

கு-ரை: மனத்தின்கண் இறைவனை உலாவச்செய்கின்ற அடியவற்கு அருளும் வகையன்றி, பிச்சையேற்றுத் தான் உண்ணாதவன், வேறு செல்வமில்லாதவன்; என்னுரையைத் தன்னுரையாகக் கொண்டு, பிறைமதி தாங்கிய சடையன்; இத்தகைய இறைவன் இந்த நகரை இருக்கையாகக்கொண்டு என் எழில் கொள்ளுவது இயல்பா என்கின்றாள். மனம் உலாம் அடியவர் - இறைவனிடம் மனத்தை உலாவச்செய்கின்ற அடியார்கள். பலி - பிச்சை. இறைவன் தான் பலி ஏற்பதும் தன்பொருட்டன்று அடியார்க்காகவே என்பதாம். இருவி - தினைகொய்ததாள். இனம் எலாம் - இடமாகிய இடங்களில் எல்லாம்.

7. பொ-ரை: நீர், தீ, ஆகாயம் ஆகியவற்றுள் இருப்பவன். நினைப்பவர் மனத்தில் உறைபவன். நாள்தோறும் அடியவர்கள் வந்து