பக்கம் எண் :

 76. திருஇலம்பையங்கோட்டூர்853


828, கிளர்மழைதாங்கினா னான்முகமுடையோன்

கீழடிமேன்முடி தேர்ந்தளக்கில்லா

உளமழையெனதுரை தனதுரையாக

வொள்ளழலங்கையி லேந்தியவொருவன்

வளமழையெனக்கழை வளர்துளிசோர

மாசுணமுழிதரு மணியணிமாலை

இளமழைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூ

ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே. 9

____________________________________________________

பொழில்களும் சூழ்ந்த இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக்கொண்டு என் எழிலைக் கவர்தல் முறையோ?

கு-ரை: இராவணனை அடர்த்தவன்; இந்த உலகில் எனதுரை தனதுரையாக, மார்பில் பாம்பணிந்து திரியும் அண்ணல் இவ்வூரை இடமாகக்கொண்டு என் நலங்கவர்தல் இயல்போ என்கிறான். வேர் உலாம் - பூமியின் அடிவரை உலாவுகின்ற, ஆருலாம் - நிறைதல் மலிந்த. ஆகம் - மார்பு, வாரணம் - யானை. மல்லல் - வளம். ஏர் உலாம்பொழில் - எழுச்சிமிக்க சோலை. நல்லன மாக்கள் - நல்ல விலங்குகள்.

9. பொ-ரை: ஆயர்பாடியை அழித்தற்கெனக் கிளர்ந்தெழுந்த மழையைக் கோவர்த்தனம் என்னும் மலையால் தடுத்த திருமாலும், நான்முகனும், கீழே அகழ்ந்து சென்று அடியையும், மேலே பறந்து சென்று முடியையும் அளந்தறியமுடியாதவாறு அழலுருவாய் ஓங்கி நின்றவன். மனத்தால் அழைத்தற்குரியனவாய் அமைந்த தன்னுடைய உரைகளை என்னுடையவாக வெளிப்படுத்தியவன். அழகிய கையில் ஒளி பொருந்திய அழலை ஏந்திய ஒப்பற்ற தலைவன். அத்தகையோன், வளமான மழைபோல, மூங்கிலில் தேங்கிய பனி நீர், காற்றால் பொழிவதும், மலைப் பாம்புகள் ஊர்வதும், அழகிய மணிகள் மாலை போல நிறைந்து தோன்றுவதும், மேகக் கூட்டங்கள் தவழும் பொழில் சூழ்ந்ததுமான இலம்பையங்கோட்டூரைத் தனது இருப்பிடமாகக் கொண்டு என் எழிலைக் கவர்ந்தான். இது முறையோ?

கு-ரை: மாலும் அயனும் அடிமுடியறியப்பெறாத அழலேந்திய ஒருவன், இவ்வூரை இருக்கையாகக்கொண்டு, இவ்வண்ணம் செய்வதா? என்கின்றாள்.