பக்கம் எண் :

910திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


917. அந்தி மதியோடு மரவச் சடைதாழ
முந்தி யனலேந்தி முதுகாட் டெரியாடி
சிந்தித் தெழவல்லார் தீர வினைதீர்க்கும்
நந்தி நமையாள்வா னல்ல நகரானே. 3

918. குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ
மிளிரும் மரவோடு வெண்ணூ றிகழ்மார்பில்
தளிருந் திருமேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல்சூழ்ந்த நல்ல நகரானே. 4

____________________________________________________

யானதுக்கங்களை அடையச் செய்தவனும், ஒளிவிடும் பொன்போன்ற சடைகள் தாழ்ந்து தொங்கக் கொக்கின் இறகோடு குளிர்ந்த வெண்மையான பிறையைச் சூடியிருப்பவனும் திகம்பரனுமாய இறைவன் நம்மை ஆளுதற்பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: தக்காயகத்தில் தேவர்களைத் துக்கப்படச்செய்த பெருமான் இவர் என்கின்றது. நக்கன் - நக்நன். இது நிர்வாணி என்னும் பொருளது.

3. பொ-ரை: மாலைக் காலத்தில் தோன்றும் பிறை மதியோடு பாம்பையும் அணிந்த சடைமுடி தாழ்ந்து தொங்க, முற்பட்ட ஊழிக் காலத்தில் கையில் அனலேந்திப் பழமையான சுடுகாட்டகத்தே எரியில் நின்றாடித் தன்னைச் சிந்தித்தே எச்செயலையும் தொடங்கும் அன்பர்களின் தீராத வினைகள் எல்லாவற்றையும் தீர்த்தருளும் நந்தியாகிய சிவபெருமான், நம்மை ஆட்கொண்டருளுதற் பொருட்டு நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.

கு-ரை: தியானிப்பவர்களுடைய தீராவினை நீக்குவார் இவர் என்கின்றது. முந்தி - ஊழித் தொடக்கத்தில். தீராவினை - இறைவன் திருவருளால் அன்றி வேறொன்றாலும் தீராத வினை. நந்தி - சிவபெருமான்.

4. பொ-ரை: குளிர்ந்த பிறை மதியைச் சூடி, கொன்றை மலர்களை அணிந்துள்ள சடைகள் தாழ்ந்து தொங்க. விளங்கும் பாம்போடு பூணநூல் திகழும் மார்பினனராய்த் தளிர் போன்ற திருமேனியை உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட சிவபிரான் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த நல்லம் என்னும் நகரில் எழுந்தருளியுள்ளான்.