பக்கம் எண் :

 87. திருவடுகூர்921


87. திருவடுகூர்

பதிக வரலாறு:

சண்பைவேந்தர் திருப்பாதிரிப்புலியூரை வணங்கிப் பதிகம்பாடித் திருவடுகூரையடைந்தார். இறைவனை வணங்கி, ‘சுடுகூர் எரிமாலை’ என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார்.

பண் : குறிஞ்சி

பதிக எண்: 87

திருச்சிற்றம்பலம்

937. சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே. 1

938. பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி
ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக்
கோலம் பொழிற்சோலைக் கூடி மடவன்னம்
ஆலும் வடுகூரி லாடும் மடிகளே. 2

____________________________________________________

1. பொ-ரை: சுடும் தன்மை மிக்க தீப மாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினரும், கொடிய மழுவாயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், விடையை ஊர்ந்து வருபவரும், நீர் வளம் மிக்க வடுகூர் இறைவர் ஆவார். மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும் ஆவார்.

கு-ரை: தீயணிவர், சுடர்வேலர். மழுவுடையர், பசி காமம் கவலை பிணி முதலியன இல்லாதவர் வடுகூரடிகள் என்கின்றது. கூர் எரிமாலை - மிக்க தீவரிசையை. வேல் - சூலம். கொடுகுஊர் - கொடுமை மிக்க ஊர். கடுகுஊர் - விரைந்து ஊரும்.

2. பொ-ரை: பால், நறுமணம் மிக்க நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடி, பொருந்துவதான வெண்ணீறு, எம்புமாலை ஆகியவற்றை ஒளி மல்க அணிந்து அழகிய பொழில்களிலும் சோலைகளிலும்.