939. சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதன்மேல்
ஓடுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு
பாடும் வடுகூரி லாடும் மடிகளே. 3
940. துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம்
கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார்
கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார்
பவரும் வடுகூரி லாடும் மடிகளே. 4
____________________________________________________
வாழும் அன்னங்கள் கூடி ஆரவாரிக்கும்
வடுகூரில் நம் அடிகளாகிய இறைவர் மகிழ்வோடு ஆடுகின்றார்.
கு-ரை: பால், நெய், தயிர், இவற்றை
ஆடி, நீறும் எலும்பும் ஒளி நிரம்பச்சூடி, நடஞ்செய்வர்
இவர் என்கின்றது. பயின்று - பலகாலும் விரும்பி.
ஏலும் - பொருந்தும். கோலம் - அழகு. ஆலும் - ஒலிக்கும்.
3. பொ-ரை: ஒளி பொருந்திய பொன்
போன்ற சடைமுடிமேல் இளந்திங்களைச் சூடி, மதம் கொண்டு
தன்பால் ஓடிவந்த யானையை, உமையம்மை அஞ்சக்
கொன்று, அதன் தோலைப் போர்த்து, அழகு பொருந்திய
வரி வண்டுகள் இதழ்களோடு கூடிய மலர்களை முகர்ந்து தேனுண்டு
பாடும் வடுகூரில், அடிகள் நடனம் ஆடுவர்.
கு-ரை: சடையின்மேல் இளம்பிறையைச்
சூடுவர்; உமையாள் அஞ்ச யானையை உரித்துப் போர்த்துக்
கொண்டு ஆடுவர் வடுகூர்நாதர் என்கின்றது. மலர் ஏடு -
பூவிதழ். மோந்து - முகர்ந்து, எழிலார் - அழகுமிக்க.
4. பொ-ரை: செந்நிறமும், மதிலும் செறிந்த
அழகிய மாடங்களை அழிக்குமாறு தீயைச் செலுத்தி அம்மதில்கள்
அழியுமாறு அம்பு எய்த சிவபெருமானார், காவல்
பொருந்திய முலையாராகிய கொடிகள் முல்லைநிலத்தில்
கைகளால் இரத்தினங்களைப் பொறுக்கி எடுக்கும்
வடுகூரில் நடம்பயிலும் அடிகளாவர்.
கு-ரை: திரிபுரம் எரியச்செய்தார்
வடுகூரிலாடும் அடிகள் என்கின்றது. துவரும் புரிசையும்
துதைந்த மணிமாடம் - காவியூட்டி மதில்கள் செறிந்த
அழகிய மாடங்கள். ஓட்டி - பரப்பி. கடிய மதில் -
|