பக்கம் எண் :

 89. திருஎருக்கத்தம்புலியூர்931


958. அந்தண் புனல்வைகை யணியாப்ப னூர்மேய
சந்த மலர்கொன்றை சடைமே லுடையானை
நந்தி யடிபரவு நலஞான சம்பந்தன்
சந்த மிவைவல்லார் தடுமாற்ற றறுப்பாரே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

பேசிப் புறம் பேச, தன்னை விரும்பிய அடியவர்களின் விபரீத ஞானத்தைப் போக்கி, மெய்யுணர்வு நல்கும் அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனை மெல்ல உள்குவார்களின் வினை மாசுகள் நீங்கும்.

கு-ரை: செய்ய கலிங்கத்தார் - சிவந்த காவியாடையார். சிறு தட்டு - சிறு தடுக்கு. புரிந்த - விரும்பிய. ஐயம் அகற்றுவான் - சந்தேக ஞானத்தை விலக்குபவன்.

11. பொ-ரை: அழகிய குளிர்ந்த நீர் நிறைந்த வைகைக் கரையில் விளங்கும் அழகிய ஆப்பனூரில் எழுந்தருளிய அழகிய கொன்றை மலர் மாலையைச் சடைமேல் அணிந்துள்ள இறைவனை, சிவன் திருவடிகளையே பரவும் நல்ல ஞானசம்பந்தன் பாடிய சந்த இசையோடு கூடிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதவல்லவர் நிலையான மெய்யறிவு பெறுவார்கள்.

கு-ரை: நந்தி - சிவபெருமான். சந்தம் - சந்தத்தோடுகூடிய திருப்பாடல்.

திருஞானசம்பந்தர் புராணம்

ஆறணிந்தார் தமைவணங்கி அங்குப் போற்றி

அணிஆப்ப னூரணைந்து பணிந்து பாடி

நீறணிந்த செல்வர்பதி பிறைவுஞ் சேர்ந்து

நிலவுதிருப் பதிகங்கள் நிகழப் பாடிச்

சேறணிந்த வயற்பழனக் கழனி சூழ்ந்த

சிரபுரத்து வந்தருளுஞ் செல்வர் செங்கண்

ஏறணிந்த வெல்கொடியார் திருப்புத்தூரை

எய்தி இறைஞ் சிச்சிலநாள் இருந்தா ரன்றே.

- சேக்கிழார்.