955. கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான்
உருக்க மடியவரை யொளிவெண் பிறைசூடி
அரக்கன் றிறலழித்தா னணியாப்ப னூரானைப்
பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
8
956. கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும்
அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல்
எண்ணில் வினைகளைவா னெழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.
9
957. செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள்
பொய்யர் புறங்கூறப் புரிந்த வடியாரை
ஐய மகற்றுவா னணியாப்ப னூரானைப்
பைய நினைந்தெழுவார் வினைபற் றறுப்பாரே.
10
____________________________________________________
8. பொ-ரை: கரிதான நீலமணி போன்ற
கண்டத்தை உடையவனும், சினம் பொருந்திய பாம்பைக்
கச்சையாக அணிந்தவனும், அடியவர்களை மனம் உருகச் செய்பவனும்,
ஒளிபொருந்திய வெண்பிறையைச் சூடியவனும், இராவணனின்
வலிமையை அழித்தவனும் ஆகிய அழகிய ஆப்பனூரில்
எழுந்தருளிய இறைவனை, சுவைக்கும் மனம் உடையவர்
வினை மாசு நீங்கப் பெறுவர்.
கு-ரை: கருக்கும் மணி மிடறன் -
மேலும் கருக்கும் நீலமணி போலும் கழுத்தினையுடையவன்.
கதநாகம் . சினத்தோடு கூடிய பாம்பு. அரக்கன் - இராவணன்.
திறல் - வலி. பருக்கும் - பருகும் என்பதன் விரித்தல்
விகாரம். குடிக்கும் என்பது பொருள்.
9. பொ-ரை: திருமால், மணம் பொருந்திய
தாமரை மலர் மேல் இனிதாய் உறையும் பிரமன் ஆகியோரால்,
அளத்தற்கரியவனாய் நின்றவனும், அடியவர் மேல்
வரும் எண்ணற்ற வினைகள் பலவற்றையும் களைபவனும்
ஆகிய அழகிய ஆப்பனூரில் விளங்கும் இறைவனைப் பண்
பொருந்த இசை பாடிப் போற்றுவார் வினை மாசு நீங்கப்
பெறுவர்.
கு-ரை: கடிக்கமலம் - மணம் உள்ள தாமரை.
அண்ணல் என்றது பிரமனை.
10. பொ-ரை: சிவந்த காவி ஆடை உடுத்த
புத்தர்களும், சிறு தடுக்கை ஆடையாக உடுத்துக் கொண்டு
திரியும் சமணர்களும் பொய்
|