அகர முதலானை யணியாப்ப னூரானைப்
பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 5
953. ஓடுந் திரிபுரங்க ளுடனே யுலந்தவியக்
காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில்
ஆடுந் தொழிலானை யணியாப்ப னூரானைப்
பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 6
954. இயலும் விடையேறி யெரிகொண் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணா ளொருபாற் கலந்தாட
இயலு மிசையானை யெழிலாப்ப னூரானைப்
பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
7
____________________________________________________
வளைத்து, அசுரர்களின் நகரங்களாக
விளங்கிய முப்புரங்களும் பொடி படச் செய்து மகிழ்ந்தவனும்,
எல்லா எழுத்துக்களிலும் கலந்து நிற்கும் அகரம்
போல எப்பொருள்களிலும் கலந்து நிற்பவனும், அழகிய
ஆப்பனூரில் எழுந்தருளியிருப்பவனுமாகிய சிவபிரான்
புகழைக் கூறும் மனம் உடையவர்கள் வினை
மாசுகளினின்று நீங்கப் பெறுவர்.
கு-ரை: தகரம் அணியருவி - தகர மரத்தை
அணிந்த அருவி என்றுமாம். நகரம் ஒரு மூன்று -
முப்புரம். அகரமுதலானை என்பது ‘அகரமுதல எழுத்தெல்லாம்’
என்ற குறட்கருத்து.
6. பொ-ரை: பறந்து திரியும் முப்புரங்களையும்
ஒரு நொடியில் அழித்து, பொடிபடச் செய்து, சுடுகாட்டைத்
தனது இடமாகக் கொண்டு, கனல் ஏந்தி நின்று, இரவில்
திருநடனம் புரிவதைத் தொழிலாகக் கொண்டவனும்,
அழகிய ஆப்பனூரில் விளங்குபவனுமாகிய இறைவனைப்
பாடும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப்
பெறுவர்.
கு-ரை: உலந்து - வற்றி.
7. பொ-ரை: மனம் போல் இயங்கும்
விடைமிசை ஏறி, எரிதலைக் கொண்ட மழுவைச்
சுழற்றிக் கொண்டு, கயல் போன்ற இரு விழிகளைக்
கொண்ட உமையம்மை திருமேனியின் ஒருபால் இணைந்து
மகிழ, இசை பாடி மகிழ்பவனாய் அழகிய ஆப்பனூரில்
எழுந்தருளியுள்ள இறைவனைப் பாடுவதைத் தம் இயல்பாகக்
கொண்ட மனம் உடையவர், வினை மாசு தீர்வர்.
கு-ரை: இயலும் விடை - மனம்போலியங்கும்
இடபம்.
|