பக்கம் எண் :

928திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


950. முருகு விரிகுழலார் மனங்கொ ளநங்கனைமுன்
பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 3

951. பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியி னுடைதாழச் சுடரேந்தி யாடுவான்
அணியும் புனலானை யணியாப்ப னூரானைப்
பணியு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 4

952. தகர மணியருவித் தடமால் வரைசிலையா
நகர மொருமூன்று நலங்குன்ற வென்றுகந்தான்

____________________________________________________

யுடைய உமாதேவி. விரவுதல் - கலந்து பணியும். வளை எயிறு - வளைந்த விஷப்பல். பரவுதல் - தோத்திரித்தல்.

3. பொ-ரை: மணம் கமழும் கூந்தலை உடைய மகளிரால் நினைக்கப் பெறும் காமனை, முற்காலத்தில் பெரிதும் சினந்து, பின் அவனுக்கு வாழ்வு தந்த பெருமானும், பெரிய காட்டகத்தே வாழும் அரவத்தை அணிந்தவனும், அழகிய ஆப்பனூரில் எழுந்தருளியவனுமாகிய இறைவனைப் பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

கு-ரை: முருகு விரி குழலாள் - மணம் வீசும் கூந்தலையுடைய பெண்கள். அநங்கன் - மன்மதன்.

4. பொ-ரை: உடலைப் பற்றிய நோய்களையும் உயிரைப் பற்றிய பிறவி நோயையும் அறுத்தருளும் பெருமானும், சுடுகாட்டத்தே கோவண ஆடையோடு அழலேந்தி ஆடுபவனும், கங்கையை முடியில் அணிந்தவனும் ஆகிய அழகிய ஆப்பனூர் இறைவனைப் பணியும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

கு-ரை: பிணியும் பிறப்பும் அறுப்பான் என உம்மை விரிக்க. துணியின் உடை - கீண்ட கோவண உடை.

5. பொ-ரை: தகரம் எனப்படும் மணப் பொருளும் மணிகளும் கலந்து விழும் அருளிகளை உடைய மிகப் பெரிய மலையை, வில்லாக