பக்கம் எண் :

 88. திருஆப்பனூர்927


88. திருஆப்பனூர்

பதிக வரலாறு:

திருப்பரங்குன்றை வணங்கியபின் திருஞானசம்பந்தப் பிள்ளையார் ஆப்பனூரை அணைந்து வணங்கி ‘முற்றுஞ் சடைமுடி’ என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.

பண் : குறிஞ்சி

பதிக எண்: 88

திருச்சிற்றம்பலம்

948. முற்றுஞ் சடைமுடிமேன் முதிரா விளம்பிறையன்
ஒற்றைப் படவரவ மதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருவாப்ப னூரானைப்
பற்று மனமுடையார் வினைப்பற் றறுப்பாரே. 1

949. குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவ மணிந்தானை யணியாப்ப னூரானைப்
பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே. 2

____________________________________________________

1. பொ-ரை: முடியைச் சூழ்ந்துள்ள சடையின்மேல் வளராத இளம் பிறையைச் சூடியவனும், ஒருதலைப் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டியுள்ளவனும், வெறுத்தற்கியலாத புகழானும் ஆகிய திருஆப்பனூர் இறைவனைப் பற்றும் உள்ளமுடையோர் வினைத்தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

கு-ரை: இப்பதிகம் ஆப்பனூரானைப் பணிவார், பரவுவார், புகழ்வார், வினைப்பற்றறுப்பர் என்கின்றது. ‘முற்றும் சடை முதிரா இளம்பிறை’ என்பதில் பொருள்முரண் உள்ளது. செற்றம் - கோபம்.

2. பொ-ரை: குராமலர் மணம் கமழும் கூந்தலையுடைய உமையம்மை விளங்கும் திருமேனியோடு தேவர்கள் கூடி வணங்கத் திருஆப்பனூரில் விளங்கும் சிவபிரானைப் பரவும் மனம் உடையவர் வினைத் தொடர்ச்சி நீங்கப் பெறுவர்.

கு-ரை: குரவம் கமழ்குழலாள் - குராமலர் மணக்கும் கூந்தலை