குற்றமற்ற புகழோடு கூடிய மணம் கமழும்
சோலைகளால் மணம் பெறுவதுமான வடுகூரில் மேவிய
இறைவன் திருவடிகளில் படிந்த மனத்தோடு ஞானசம்பந்தன்
பாடிய இப்பதிகத் தமிழை ஓதி, அடிசேர்ஞானம் பெற்றார்,
திருவடிப்பேறு பெறுவர்.
கு-ரை: இவ்வுலகத்துள்ள நோன்பெல்லாம்
ஆய இறைவன் எழுந்தருளியுள்ள வடுகூரைப் பாடிய திருவடிஞானத்தால்
வந்த இத்திருப்பாடல்களை வல்லார், திருவடி சேர்முத்தியை
எய்துவார்கள். படி - பூமி. படியான சிந்தை - படிதலான
மனம். அடி ஞானம் - சிவஞானம்; அடிசேர்வார் ஞானம் பெற்றார்,
திருவடிப்பேறு பெறுவர்.
கு-ரை: இவ்வுலகத்துள்ள நோன்பெல்லாம்
ஆய இறைவன் எழுந்தருளியுள்ள வடுகூரைப் பாடிய திருவடிஞானத்தால்
வந்த இத்திருப்பாடல்களை வல்லால், திருவடிசேர்முத்தியை
எய்துவார்கள். படி - பூமி. படியான சிந்தை - படிதலான
மனம். அடி ஞானம் - சிவஞானம்; அடிசேர்வார் -
அடிசேரும் முத்தியாகிய சாயுச்சிய முத்தியை அடைவார்கள்.
திருஞானசம்பந்தர்
புராணம்
கன்னி மாவனங்
காப்பென இருந்தவர்
கழலிணை
பணிந்தங்கு
முன்ன மாமுடக் கான்முயற் கருள்செய்த
வண்ணமும்
மொழிந்தேத்தி,
மன்னு வார்பொழில்
திருவடு கூரினை
வந்தெய்தி
வணங்கிப்போய்ப்,
பின்னு
வார்சடை யார்தரு வக்கரை
பிள்ளையார்
அணைவுற்றார்.
- சேக்கிழார்.
நால்வர் நான்மணிமாலை
தேனே றலர்சூடிச்
சில்பலிக்கென்றூர்திரியும்
ஆனேறி யாண்டுப்பெற் றான்கொனீ - தானேறும்
வெள்ளைமணி யென்று வினாவுவோம் வாங்கியவப்
பிள்ளையையாங் காணப் பெறின்.
- சிவப்பிரகாச
சுவாமிகள். |
|