பக்கம் எண் :

 88. திருஆப்பனூர்925


வந்து நயந்தெம்மை நன்று மருள்செய்வார்
அந்தண் வடுகூரி லாடும் மடிகளே. 9

946. திருமா லடிவீழத் திசைநான் முகனாய
பெருமா னுணர்கில்லாப்பெருமா னெடுமுடிசேர்
செருமால் விடையூருஞ் செம்மான் றிசைவில்லா
அருமா வடுகூரி லாடும் மடிகளே. 10

947. படிநோன் பவையாவர் பழியில் புகழான
கடிநா ணிகழ் சோலை கமழும் வடுகூரைப்
படியா னசிந்தை மொழியார் சம்பந்தன்
அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே. 11

திருச்சிற்றம்பலம்

____________________________________________________

மாலை நேரத்தில் வந்து விரும்பி எமக்கு நன்றாக அருள் செய்வார்.

கு-ரை: மலர் புனைந்த சடைக்காட்டில் இருப்பதால் மணம் பெற்ற மதி சிந்துகின்ற கதிர்களோடு வந்து நயந்து எமக்கு நன்மையை அருளுவர் வடுகூரிலழகர் என்கின்றது. சந்தம் - அழகு. கதிர்மாலை - கிரணவரிசை. நயந்து - இனியன பலகூறி, நன்றும் அருள்செய்வார் - நன்றாக அருளுவர். நன்றும் மருள் செய்வார் - நன்றாக மயங்குவர் என்றுமாம்.

10. பொ-ரை: எட்டுத் திசைகளிலும் ஒளி பரவுமாறு அரிய பெரிய வடுகூரில் நடனம் ஆடும் அடிகள். திருமால் தம் அடியை விரும்பித் தோண்டிச் செல்லவும், திசைக்கு ஒரு முகமாக நான்கு திருமுகங்களைக் கொண்ட பிரமனாகிய தலைவனும் அறிய முடியாதபெரிய முடியினை உடைய இறைவர், போர் செய்யத் தக்க விடைமீது எழுந்தருளிவரும் சிவந்த நிறத்தினர்.

கு-ரை: அயனும் மாலும் அறியவொண்ணாப் பெருமான்மாலாகிய இடபமூரும் செம்மான் வடுகூர் அடிகள் என்கின்றது. செருமால் - பொருகின்ற பெரிய; திருமாலாகிய என்றுமாம். திசைவில்லா அரு மா வடுகூரில் - திசைகளில் எல்லாரும் ஒளியைச் செய்கின்ற அரிய பெரிய வடுகூரில்.

11. பொ-ரை: இவ்வுலகில் கூறப்படும் நோன்புகள் பலவற்றுக்கும் உரியவராய் விளங்கும் சிவபிரான் எழுந்தருளியதும்,