பக்கம் எண் :

924திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


943. நெடியார் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட
அடியர் வடுகூரி லாடும் மடிகளே. 7

944. பிறையு நெடு நீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே. 8

945. சந்தம் மலர்வேய்ந்த சடையின் னிடைவிம்மு
கந்தம் மிகுதிங்கட் சிந்து கதிர்மாலை

____________________________________________________

7. பொ-ரை: வடுகூரில் ஆடும் அடிகள் பேருருவம் கொள்பவர். சிறிதான கலைநிரம்பாத பிறை மதியைச் சூடும் முடியை உடையவர். விடையை ஊர்ந்து வருபவர். கொடியவர் மொழிகளை ஏற்றுக் கொள்ளாதவர். கொல்லும் தொழிலைச் செய்யும் காலன் மடியுமாறு உதைத்தருளிய திருவடியினர்.

கு-ரை: நெடியர், சிறுமதிசூடும் முடியர், விடையூர்வர், கொடியர் மொழிகொள்ளாதவர், காலனையுதைத்த அடியவர் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. நிரம்பா மதி - இளம்பிறை. கடிய தொழில் - கொடுந்தொழில்.

8. பொ-ரை: அதிர்கின்ற பறையும் வேய்ங்குழலும் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகள், இளம் பிறை, பெருகிய கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர், வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.

கு-ரை: கங்கையும் பிறையும் பிரியா முடியாரும், வேதம் பலபாடி மயானத்துறைவாரும் வடுகூரில் ஆடும் அடிகள் என்கின்றது. நெடுநீ் - கங்கை. பறையும் குழலும் போலப் பல வண்டு ஆங்கு அறையும் எனப் பிரிக்க.

9. பொ-ரை: அழகு தண்மை ஆகியவற்றை உடைய வடுகூரில் ஆடும் அடிகள் அழகிய மலர்கள் வேய்ந்த சடையின்கண் பெருகி எழும் மணம் மிகும் பிறை மதி வெளியிடும் கிரணங்களை உடைய