பக்கம் எண் :

 89. திருஎருக்கத்தம்புலியூர்933


960. இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதின்மூன்று நீறாய் விழவெய்த
சிலையா னெருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையா னடியேத்தக் கருதா வினைதானே. 2

961. விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ
எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற
அண்ணா வெனவல்லார்க் கடையா வினைதானே. 3

962. அரையார் தருநாக மணிவா னலர்மாலை
விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி

____________________________________________________

2. பொ-ரை: இலை வடிவமாக அமைந்த சூலப்படையை உடையவனும், எம் பெருமானும், நிலைபெற்ற முப்புரங்களையும் நீறாய்ப் பொடிபடுமாறு கணை எய்த வில்லை உடையவனும், எருக்கத்தம்புலியூரில் விளங்கும் கோயிலில் மேவியிருப்பவனும் ஆகிய கலைகளின் வடிவான சிவபிரானின் திருவடிகளை ஏத்தி வாழ்த்துவோரை, வினைகள் கருதா.

கு-ரை: இலையார்தரு சூலப்படை - இலைவடிவாகச் செய்யப் பெற்ற சூலப்படை. நிலையார் - அழிந்துபடுந்தன்மையரான திரிபுராதிகள்.

3. பொ-ரை: விண்ணவர் தலைவனே. வேறுபட்ட வடிவும் பண்பும் உடையவனே, விடைமீது ஏறிவருபவனே! பெண், ஆண், அலி என்னும் திணை பால் பாகுபாடுகளைக் கடந்துள்ளவனே, பித்தனே, பிறை சூடியவனே, எல்லோராலும் எண்ணத்தகும் எருக்கத்தம் புலியூரில் உறைகின்ற தலைவனே என்றுரைத்துப் போற்ற வல்லவரை, வினைகள் அடையா.

கு-ரை: பெண் ஆண் அலியாகும் - பால் பாகுபாட்டையும் திணைப்பாகுபாட்டையும் கடந்தவன் என்பது கருத்து. ‘பித்தா பிறை சூடீ’ இத்தொடரே சுந்தரர் வாக்கில் தோன்றுவது. எண் ஆர் - எண்ணுதல் பொருந்திய.

4. பொ-ரை: இடையில் பாம்பைப் பொருந்துமாறு அணிந்துள்ளவனும், மணம் கமழும் கொன்றை மலர் மாலையை அணிந்துள்ள