வரையா னெருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற
திரையார் சடையானைச் சேரத் திருவாமே. 4
963. வீறார் முலையாளைப் பாக மிகவைத்துச்
சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான்
ஏறா னெருக்கத்தம் புலியூ ரிறையானை
வேறா நினைவாரை விரும்பா வினைதானே. 5
964. நகுவெண் டலையேந்தி நானாவிதம் பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத்
தகுவா னெருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே
தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. 6
____ _______________________________________________
வனும், விடைமீது ஏறி வருபவனும், கயிலை
மலையைத் தனக்குரிய இடமாகக் கொண்டவனும், எருக்கத்தம்புலியூரில்
மகிழ்ந்து உறைபவனும் ஆகிய அலைகள் வீசும் கங்கை
நதியை, சடைமிசைத் தரித்த சிவபிரானைச் சேர்வோர்க்குச்
செல்வங்கள் வந்து சேரும்.
கு-ரை: விரை - மணம். வரையான் - கைலைமலையை
யுடையவன். திரையார் சடையான் - கங்கையணிந்த
சடையான். திரை ஆகுபெயராய்க் கங்கையை உணர்த்திற்று.
5. பொ-ரை: வேறொன்றற்கில்லா அழகினை
உடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை, இடப்பாகமாக
சிறப்புடன் வைத்துக் கொண்டருளியவனும், சீறி வந்த
காலனின் சினம் அடங்கச் செய்தவனும், இடப ஊர்தியை
உடையவனும், எருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள
இறைவனும் ஆகிய சிவபிரானைத் தனித்திருந்து தியானிப்பவரை
வினைகள் விரும்பா.
கு-ரை: வீறு - தனிப்பெருமை. வேறொன்றற்கு
இல்லாத அழகு என்பர் நச்சினார்க்கினியர். அழித்தான்
என்னாது அழிவித்தான் என்றது காலன் தானேயுணர்ந்து
அடங்கச்செய்த தன்மையால். வேறா நினைவாரை - தனியேயிருந்து
தியானிப்பவர்களை.
6. பொ-ரை: சிரிக்கும் வெள்ளிய
தலையோட்டைக் கையில் ஏந்திப் பலவிதமாகப்
பாடிக் கொண்டு மகளிர் இடும் பிச்சையை ஏற்கப் புகுபவனாய்ப்
புலித்தோலைத் தோளில் இட்டுக்கொண்டு தகுதி
|