பக்கம் எண் :

 90. திருப்பிரமபுரம்935


* * * * * 7

965. ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட
கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில்
தேவே யெனவல்லல் தீர்தல் திடமாமே. 8

966. மறையா னெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்தொத்தே
இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட
கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே. 9

____________________________________________________

வாய்ந் தவனாய் எருக்கத்தம்புலியூரில் தங்கி அங்கே நிலைத்திருப்பவனாகிய இறைவன் கழல்களை ஏத்த வினைகள் தொடரா.

கு-ரை: நானாவிதம் பாடி - பலவகையான பண்களைப் பாடி. அயம் பெய்யப் புகுவான் - பிச்சையை மகளிர் பெய்யப் புகுவான். ஐயம் அயம் எனப் போலியாயிற்று. பியற்கு - பிடரிக்கு.

7. * * * * * *

8. பொ-ரை: ஆ ஆ என்ற இரக்கக் குறிப்போடு இராவணன் அலறுமாறு அவனை அடர்த்து, பின் தேவா என அவன் வேண்ட அருள் நிறைந்த செல்வங்கள் பலவற்றை வழங்கியருளிய தலைவனே, எருக்கத்தம்புலியூரில் விளங்கும் சிறப்புமிக்க கோயிலில் எழுந்தருளும் தேவனே என்று போற்ற, நம் அல்லல்கள் தீர்தல் உறுதியாகும்.

கு-ரை: ஆ ஆ - இரக்கக்குறிப்பு. தேவா என - அவனே, தேவா என்று வேண்ட.

9. பொ-ரை: வேதங்களை ஓதும் நான்முகனும், நெடுமாலும் காணுதற்கு அரியவனே, மழுவைக் கையில் ஏந்தியவனே, கலை நிறையாத பிறை மதியைச் சூடியவனே, முத்துக்களின் கொத்துப் போன்ற இறையோனே என்று போற்றி, எருக்கத்தம்புலியூரை இடமாகக் கொண்ட கறைமிடற்று அண்ணலை நினைந்தால், வினை கெடும்.

கு-ரை: மறையான் - பிரமன். நிறையாமதி - இளம்பிறை. முத்தின் தொத்தே - முத்தின் கொத்தே.