982.. பிறவி யறுப்பீர்காள், அறவ னாரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே. 2 ____________________________________________________
அநாதியே ஆன்மாவைப்பற்றி நிற்கும்
பாசத்தால் இரு வினைக் கீடாகக் கருவயிற் பிண்டமாய்
வளர்ந்து பிறந்து, பரிபாகமுற்ற வினைகள் துன்ப இன்பங்களை
யூட்டுகின்ற காலத்து வருந்தி மகிழ்ந்து, அலைகின்ற
ஒழியாத் துன்பத்தினின்றும் உய்திவேண்டும் உத்தமர்களையழைத்து,
அன்போடு மலர் தூவுங்கள்; கைகளால் தொழுங்கள்;
எடுத்து வாழ்த்துங்கள்; உங்களுடைய பற்றறும், வினைகள்
விண்டுபோம்; இன்பமுத்தி எய்தலாம் எனப் பயனும்,
வழியும் வகுப்பன இப் பத்துப்பாடல்களும்.
இம் முதற்பாட்டு முத்தி எய்தலாம் என்பதனைக்
தெரிவித்து, அதற்கு உபாயம் உணர்த்துகின்றது.
சித்தம் தெளிவீர்காள் - மலமறைப்பாற்
கலக்குண்ட சித்தந் தெளிய விரும்புபவர்களே. அத்தன்
- அனைவர்க்குந் தலைவன். தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ள
ஆரூரைப் பத்தியோடு மலர் தூவி வழிபடுங்கள் முத்தியாகும்
என்பது போந்த பொருள். தெளிவீர்காள் என்று எதிர்காலத்தாற்
கூறியது மலர் தூவல் முதலிய கிரியைத் தொண்டுகள் சித்தந்தெளிதற்கு
ஏதுவென்பது தெரித்தற்கு; ‘கிரியையென மருவும் யாவையும்
ஞானங் கிடைத்தற்கு நிமித்தம்’ என்பது ஞானசாத்திரமாகலின்.
மலர் தூவ என்றது இறைவனும், ஞானாசாரியனும் எழுந்தருளியுள்ள
இடங்களை மலர் தூவி வழிபடல் மரபு என்பதை விளக்கி
நிற்கின்றது. முத்தியாகும் என முத்தியை வினை முதலாகக்
கூறியருளியது திருவருட்பதிவு உற்றகாலத்துத் தாமே வந்தெய்துவதோர்
சிவானந்தமாதலின்
2. பொ-ரை: பிறப்பினை அறுத்துக்
கொள்ள விரும்புபவர்களே, அறவடிவினனாகத் திருவாரூரில்
எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிக்குக்
காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.
கு-ரை: முத்தியாதற்குப் பிறவி இடையூறாதலின்
அப்பிறப்பு, பாவத்தைப் பற்றி வருவதொன்றாதலின்,
பாவமோ பற்றுள்ளங் காரணமாக எழுவதாகலின், காரியமாகிய
பிறப்பினையறுக்க விரும்புவார்க்குத் துறவியாதலே
சிறந்த உபாயம் என்பதை உணர்த்துகின்றது இப்பாட்டு.
|