பக்கம் எண் :

 91. திருவாரூர்943


983. துன்பந் துடைப்பீர்கள், அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 3

984. உய்ய லுறுவீர்காள், ஐய னாரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே. 4

____________________________________________________

அறவன் - தருமவடிவன். மறவாது ஏத்துமின் - நினைப்பின்றி நினைத்து வழிபடுங்கள். நெஞ்சொடு படாத செயலும் உண்டன்றே! அங்ஙனன்றிப் புத்திபூர்வமாக வழிபடுங்கள். துறவியாகும் - பிறவிக்கு ஏதுவாகிய பற்றுள்ளங்கழியும் என்பதாம். மறங்கடிய அறவனாலன்றியாகாது என்பது உணரக்கிடக்கின்றது. துறவி - துறவு. வி, தொழில் விகுதி.

3. பொ-ரை: துன்பங்களைத் துடைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத் தூவி வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம் உளதாம்.

கு-ரை: பிறந்தார் உறுவது பெருகிய துன்பமாதலின் அதனைத் துடைக்க வேண்டும் என்பதும், அதற்கு உபாயம் மலர் தூவலே என்பதும் உணர்த்துகின்றது இப் பாடல்.

அன்பன் - சிவன். அன்பனணி யாரூர் - அன்பனால் அழகு பெறும் ஆரூர். பொன்மலர் தூவ என்பது செம்பொன்னும் வெண்பொன்னுமாகிய இரண்டாலும் பூக்கள் செய்து அவற்றை முல்லை மலரோடு கலந்து தூவுதல் மரபு. இன்பம் ஆகும் - துன்பநீக்கத்திற்குத் தொழுத உங்கட்கு இன்பமும் ஆகும் என்பதாம். இன்பம் என்றது இம்மையின்பத்தையும் நிரதிசயா நந்தப் பேரின்பத்தையும்.

4. பொ-ரை: உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக்கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.

கு-ரை: இப்பாடல், துன்பந் துடைத்து உய்தியை விரும்புவீராயின் கைகளால் தொழுங்கள் என்றருளிச் செய்கின்றது.

ஐயன் - தலைவன். வினை தானே நையும் என்றது தொழு