பக்கம் எண் :

944திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


985. பிண்ட மறுப்பீர்காள், அண்ட னாரூரைக்
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே. 5

986. பாச மறுப்பீர்காள், ஈச னணியாரூர்
வாச மலர்தூவ. நேச மாகுமே. 6

____________________________________________________

வாரிடம் இருப்புக்கொள்ள இடமின்மையால் வல்வினைகள் மெலிந்துபோம் என்பதாம். வினை உண்டாலன்றிக் கழியாதாகலின் நையும் என்றார்.

5. பொ-ரை: மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவா நிலை எய்தலாம்.

கு-ரை: கீழைத்திருப்பாட்டு பிராரத்தவினை நைந்துபோம் என்றது; இத் திருப்பாட்டு வரக்கடவ வினைகளும் விண்டுபோம் என்கின்றது.

பிண்டம் - கருவில் உறுப்பு நிரம்பாதிருக்கும் தசைத்திரள், ‘சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்‘ என்பது புறநானூறு. பிண்டம் அறுப்பீர்காள் - மீண்டும் விளையும் கருவிடைப் பிண்ட நிலையை அறுப்பவர்களே! அண்டன் ஆரூர் என்றது தேவலோகத்தில் எழுந்தருளியிருந்ததை மனங்கொண்டு கூறியது. அண்டன் - தேவன். வினை விண்டுபோம் - வினைகள் மீண்டும் அங்குரியாதவாறு கெடும். நெல் வாய்விண்டது என்பதுபோல.

6. பொ-ரை: உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.

கு-ரை: கீழைத்திருப்பாட்டு வினைநீக்கங் கூறியது. அவ்வினையோடு ஒருங்கு எண்ணப் பெறுவதாய், அநாதியே பந்தித்துள்ள பாசமுங் கெடும்; இறைவன் நேசமாகும் என்று சொல்கிறது இப்பாட்டு பாசம் - ஆணவம். கட்டி நிற்பதாகலின் அதனையறுக்கவேண்டுமாயிற்று. ஆன்ம அறிவைப் பந்தித்து அடக்கி நிற்றலின் பாசம் எனப் பெற்றது. நேசமாகுமே என்பதையுற்று நோக்குகின்ற எம்போலியர்க்கு.