993. இறைவ ராயினீர், மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2
994. செய்ய மேனியீர், மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர், உய்ய நல்குமே. 3
995. நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறு மருளுமே. 4
996. காமன் வேவவோர், தூமக் கண்ணின்னீர்
நாம மிழலையீர், சேம நல்குமே. 5
____________________________________________________
2. பொ-ரை: எல்லோருக்கும் இறைவராக
விளங்கும் பெருமானீரே, வேதங்களின் ஒலி நிறைந்த
திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, கறை
படிந்ததாக அளிக்கப்படும் காசில் உள்ள அக்கறையை
நீக்கி முறையாக அளித்தருளுக.
கு-ரை: இறைவர் ஆயினீர் என இயற்கையே
இறைவரை, ஆயினீர் என ஆக்கம்கொடுத்துக் கூறினார்,
முறைப்படி வேற்றுமையறக் கொடுக்காமையால். கறைகொள்
காசு - அழுக்குப் படிந்த காசு; நாள்படச் சேமித்துவைத்த
காசு என்பது கருத்து.
3. பொ-ரை: சிவந்த திருமேனியை
உடையவரே, மெய்ம்மையாளர் வாழும் திருவீழிமிழலையில்
எழுந்தருளியிருப்பவரே, படம் எடுக்கும் பாம்பை அணிகலனாகப்
பூண்டுள்ளவரே, அடியேங்கள் உய்யுமாறு வாசியில்லாததாகக்
காசு அருளுக.
கு-ரை: மெய் - உண்மைத்தன்மை. பை -
படம்.
4. பொ-ரை: திருவெண்ணீற்றை அணிந்தவரே,
ஆனேற்றில் ஏறி வருபவரே, பலராலும் புகழப்பெறும் திருவீழிமிழலையில்
எழுந்தருளியவரே, காசு அருளுவதோடு எமக்கு முத்திப் பேறும்
அருளுவீராக.
கு-ரை: பேறும் அருளும் - காசுகொடுத்ததோடமையோம்;
வீடு பேற்றையும் கொடும் என்பதாம்.
5. பொ-ரை: காமனை எரிந்து அழியுமாறு செய்த
புகை பொருந்திய அழல் விழியை உடையவரே! புகழ்
பொருந்திய திருவீழி
|