பக்கம் எண் :

952திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


997. பிணிகொள் சடையீனீர், மணிகொண்மிடறினீர்
அணிகொண் மிழலையீர், பணிகொண்டருளுமே. 6

998. மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7

999. அரக்க னெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8

____________________________________________________

மிழலையில் எழுந்தருளியவரே! எமக்குச் சேமத்தை அருளுவீராக.

கு-ரை: தூமக்கண் - புகையோடுகூடிய தீக்கண். நாமம் - புகழ். சேமம் - பாதுகாவல். க்ஷேமம் என்பதன் திரிபுமாம்.

6. பொ-ரை: கட்டப்பட்ட சடையை உடையவரே, நீலமணி போன்ற கண்டத்தை உடையவரே, அழகு பொருந்திய திருவீழிமிழலையில் எழுந்தருளியிருப்பவரே, எம்மைப் பணி கொண்டு அருளுவீராக.

கு-ரை: பிணிகொள்சடையினீர் - கட்டிய சடையையுடையவரே. மணி - நீலமணி. பணி - ஏவல்.

7. பொ-ரை: உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவரே, உயர்வுடைய திருவீழிமிழலையில் உறைபவரே, கங்கை சூடிய திருமுடியை உடையவரே, எங்களது ஐயுறவைப் போக்கியருளுக.

கு-ரை: பங்கு - ஒருபகுதி. துங்கம் - உயர்வு. சங்கை - சந்தேகம், தேவரீரிடம் வேற்றுமை சிறிதும் இல்லையாகவும் நாங்கள் சந்தேகிக்கிறோம்; வாசிதீர அளித்து அதனைப்போக்கியருளும்.

8. பொ-ரை: இராவணன் கயிலை மலையின் கீழ் அகப்பட்டு நெரிய இரக்கம் காட்டியருளியவரே, எங்கும் பரவிய புகழ் உடைய திருவீழிழலையில் உறைபவரே, எமக்கு அளிக்கும் காசில் உள்ள குறையைப் போக்கியருளுக.

கு-ரை: அரக்கன் - இராவணன். பரக்கும் - எங்கும் புகழ் பரவிய. கரக்கை - வஞ்சகம்.