மாதவிமேய வண்டிசைபாட
மயிலாடப்
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும்
புறவம்மே. 2
1049. வற்றாநதியும் மதியும் பொதியுஞ்
சடைமேலே
புற்றாரரவின் படமாடவுமிப்
புவனிக்கோர்
பற்றாயிடுமின் பலியென்றடைவார்
பதிபோலும்
பொற்றாமரையின் பொய்கைநிலாவும்
புறவம்மே. 3
___________________________________________________
வளம் சான்ற புறவம் என்னும் பதி,
உமையம்மையை ஒரு பாகமாகவும் திருமாலை ஒரு
பாகமாகவும் கொண்டு மகிழ்கின்ற நம் மேலான
தலைவன் வைக்கும் நகராகும்.
கு-ரை: ஒருபாதி உமையும் ஒருபாதி
மாலுமாக இருக்கும் நாதன்நகர் புறவம் என்கின்றது.
மாதவி மேய வண்டு -குருக்கத்தியில் மேவிய
வண்டுகள். புன்னை போதலர் செம்பொன் கொடுக்கும்
புறவம் - புன்னைமரங்கள் போதாய் இருந்து அலர்ந்து
மகரந்தங்களாய செம்பொன்னைக் கொடுக்கும்
புறவம்; இதனால் மரங்களும் வள்ளன்மை செய்யும்
நகரம் என்றறிவித்தவாறு.
3. பொ-ரை: என்றும் நீர் வற்றாத
கங்கையும், பிறையும் பொருந்திய சடையின்மேல்
புறத்தை இடமாகக் கொண்ட பாம்பு படத்துடன் ஆட,
இவ்வுலகிற்கு ஒரு பற்றுக்கோடாகி, எனக்குப் பலி
இடுமின் என்று பல ஊர்களுக்கும் செல்லும்
சிவபிரானது பதி, அழகிய தாமரைகள் மலர்ந்துள்ள
பொய்கை விளங்கும் புறவம் என்னும் பதியாகும்.
கு-ரை: இவ்வுலகத்திற்கு
ஒருபற்றுக்கோடாக இருக்க எமக்குப் பலியிடுங்கள்
என்றுவரும் இறைவன்பதி புறவம் என்கின்றது.
வற்றா நதி - கங்கை. பொற்றாமரையின்
பொய்கை நிலாவும் - பொற்றாமரையைப்போல
பிரமதீர்த்தம் விளங்குகின்ற.
|