பக்கம் எண் :

 தலங்களின் வரலாற்றுக் குறிப்புக்கள்97


சங்கமமாகிய மூன்று திருமேனியையும் வழிபடலாம். குருமூர்த்தம் தோணியப்பர்; இலிங்க மூர்த்தம் பிரமபுரீசர்; சங்கமமூர்த்தம் சட்டை நாதர். இதுவே திருஞானசம்பந்தப்பெருமான் அவதாரஸ்தலம்.

சுவாமிகளின் பெயர்கள்:

சுவாமி பிரமபுரீசுவரர்; அம்மை திருநிலைநாயகி. சுவாமி அம்மன் கோயில்களுக்கிடையில் ஞானசம்பந்தர் ஆலயம் இருப்பது சோமாஸ்கந்தர் நிலையை நினைவூட்டுவது. திருத்தோணிச் சிகரத்துள்ள இறைவர் பெரியநாயகர்; தோணியப்பர் எனவும் வழங்கப்பெறுவர். இறைவி பெரியநாயகி; திருஞானசம்பந்தப் பெருமானுக்குச் சிவஞானப்பால் அளித்தவர் இவரே.

தீர்த்தங்கள்:

பிரமதீர்த்தம், காளிதீர்த்தம், கழுமலநதி, விநாயகநதி, புறவநதி முதலிய இருபத்திரண்டு தீர்த்தங்கள் உள்ளன.

வழிபட்டோர்:

முருகன், காளி, பிரமன், இந்திரன் முதலியோர். ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பட்டினத்து அடிகள், நம்பியாண்டார் நம்பிகள், சேக்கிழார், அருணகிரிநாதர் முதலியோர் போற்றியுள்ளனர். கணநாதநாயனார் அவதரித்த தலம். திருக்கயிலாய பரம்பரையில் வந்தருளிய அருள்நமச்சிவாயர், கங்கைமெய்கண்டார் சிற்றம்பலநாடிகள் முதலியோர் வாழ்ந்த தலம்.

விழாக்கள்:

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அர்த்தயாமத்தில் ஸ்ரீ சட்டைநாதருக்கு விசேஷ வழிபாடு நடைபெறும். சித்திரைமாதம் இறைவன் இறைவியர்க்குப் பெருவிழா நடைபெறும். அதில் இரண்டாந்திருநாள் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை அளித்தருளிய திருமுலைப்பால் திருவிழா. இவ்விழாக்களிற் பெரும்பாலன திருஞானசம்பந்தர் ஐதீகத்தை ஒட்டியனவேயாம்.

கல்வெட்டு:

இத்தலத்துக்கு நாற்பத்தேழு கல்வெட்டுகள் உள்ளன. இரண்டாங்குலோத்துங்கன் கல்வெட்டுமுதல் வேங்கட தேவராயர்