1054. பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப்
பௌவத்தைத்
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந்
தொழின்மேவும்
அரக்கன்றிண்டோ ளழிவித்தானக்
காலத்திற்
புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர்
புறவம்மே. 8
1055. மீத்திகழண்டந் தந்தயனோடு
மிகுமாலும்
மூர்த்தியை நாடிக் காணவொணாது
முயல்விட்டாங்
____________________________________________________
தாமரை மலர் மேல் உறையும் நான்முகன்
போல வேதங்களில் வல்ல அந்தணர்கள் வாழும்
புறவமாகும்.
கு-ரை: திசையெல்லாம் நடுங்கவந்த
யானையை உரித்துப் போர்த்தவன் பதி புறவம்
என்கின்றது. கார்சேர் வரை - கருமை சேர்ந்த மலை.
கோலமுகில்போல் - அழகிய மேகத்தைப்போல. பாவனை
செய்யும் - விரும்பியிருக்கும். புண்டரிகத்தோன் -
பிரமன்.
8. பொ-ரை: எங்கும் பரவிய பழமையான
புகழை உடைய தேவர்களின் கடல் போன்ற படையை,
ஊழித் தீப் போன்று அழிக்கும் தொழிலில் வல்ல
இராவணனின் வலிய தோள் வலியை அக்காலத்தில்
அழித்தருளி, அனைத்து உலகங்களையும் புரந்தருளும்
வேந்தனாக விளங்கும் சிவபிரான் எழுந்தருளிய
பழமையான ஊர் புறவமாகும்.
கு-ரை: தேவர்களின் சேனைக்கடலை
ஓட்டும் ஊழித் தீயைப்போல, சண்டைசெய்யும்
இராவணனது தோள்வலியை வாட்டியவனது பதி புறவம்
என்கிறது. பௌவம் - கடல், துரக்கும் - ஓட்டும்.
9. பொ-ரை: மேலானதாக விளங்கும்
உலகங்களைப் படைத்த பிரமனும், புகழால் மேம்பட்ட
திருமாலும் அழலுருவாய் வெளிப்பட்ட
சிவமூர்த்தியின் அடிமுடிகளைக்காண இயலாது தமது
முயற்சியைக் கைவிட்டு ஏத்த, அவர்கட்குக் காட்சி
தந்தருளிய சிவபிரானது இடம், மலர்கள் நிறைந்த
சோலைகளில் தென்றல் வந்த உலாவும் புறவமாகும்.
|