1052. கற்றறிவெய்திக் காமன்முன்னாகும்
முகவெல்லாம்
அற்றர னேநின் னடிசரணென்னு
மடியோர்க்குப்
பற்றதுவாய பாசுபதன்சேர்
பதியென்பர்
பொற்றிகழ்மாடத் தொளிகள் நிலாவும்
புறவம்மே. 6
1053. எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர்
வரையென்னக்
கொண்டெழுகோல முகில்போற்பெரிய
கரிதன்னைப்
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும்
பதியென்பர்
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர்
புறவம்மே. 7
___________________________________________________
கு-ரை: தேவர்கள் ‘தேவதேவா!
அடைக்கலம்‘ என்று அரற்றவிடம் உண்டவர் பதி இது
என்கின்றது. சரண் - அடைக்கலம். கார்விடம் - கரிய
விஷம். பா ஆர் மறை - பாக்களோடு கூடிய வேதம்.
6. பொ-ரை: மெய்ந்நூல்களைக் கற்று,
அதனால் நல்லறிவும் பெற்று, காமனாகிய மன்மதனின்
குறிப்பினால் ஆகும் காமவிருப்பமெல்லாம் அற்று,
‘அரனே! நின் திருவடிகளே சரண்‘ என்று கூறும்
அடியவர்கட்குப் பற்றுக்கோடாய்ப் பாசுபதன்
எழுந்தருளிய பதி, பொன் நிறைந்து விளங்கும்
மாடவீடுகளின் ஒளி சூழ்ந்த புறவம் என்னும்
பதியாகும் என்பர்.
கு-ரை: கற்றறிந்து, காமனுக்கும்
முன்னோனாயிருக்கும் முக ஒளியெல்லாம் கெட்டு,
அரனே அடைக்கலமென்னும் அடியவருக்குப் பற்றாய பரன்
சேர் பதி புறவம் என்கின்றது. முகவு - முகவொளி.
7. பொ-ரை: எண்திசையில் உள்ளாரும்
அஞ்சிடுமாறு கரிய மலைபோலவும், நீரை முகந்து
கொண்டெழுந்த அழகிய கரிய மேகம் போலவும் வந்த
பெரிய களிற்று யானையை முற்காலத்தில் கொன்று
அதன் தோலை உரித்துப் போர்த்த சிவபிரான்
விரும்பியிருக்கும் பதி
|