பக்கம் எண் :

 98. திருச்சிராப்பள்ளி975


1059. கைம்மகவேந்திக் கடுவனொடூடிக்

கழைபாய்வான்

செம்முகமந்தி கருவரையேறுஞ்

சிராப்பள்ளி

வெம்முகவேழத் தீருரிபோர்த்த

விகிர்தாநீ

பைம்முகநாகம் மதியுடன்வைத்தல்

பழியன்றே. 2

1060. மந்தம்முழவம் மழலைததும்ப

வரைநீழல்

செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த

சிராப்பள்ளிச்

___________________________________________________

2. பொ-ரை: சிவந்த முகம் உடைய பெண் குரங்கு தனது ஆண் குரங்கோடு ஊடல் கொண்டு மூங்கில் புதரில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளுதற்காகத் தனது குட்டியையும் ஏந்திக் கொண்டு கரிய மலை மீது ஏறும் சிராப்பள்ளியில் எழுந்தருளியவனும் கொடிய முகத்தோடு கூடிய யானையின் தோலைப் போர்த்துள்ள விகிர்தனும் ஆகிய நீ படத்தோடு கூடிய முகத்தினை உடைய நாகப்பாம்பை அதன் பகைப்பொருளாகிய பிறை மதியுடன் முடிமிசை அணிந்திருத்தல் பழிதரும் செயல் அன்றோ?

கு-ரை: பெண்குரங்கு ஆண்குரங்கோடு ஊடி, குட்டியையும் தூக்கிக் கொண்டு மூங்கிலில் பாய்வதற்காக மலைமிசையேறும் சிராப்பள்ளிநாதா! நாகத்தையும் மதியையும் உடனாகவைத்தல் உனக்குப் பழியாகுமல்லவா?. கைம்மகவு - கைக்குழந்தை. கடுவன் - ஆண்குரங்கு. கழை - மூங்கில் செம்முக மந்தி - சிவந்த முகத்தோடு கூடிய பெண்குரங்கு. பெண்குரங்கின் முகம் சிவப்பாயிருக்குமென்ற குரங்கின் இயற்கையையும் ஈண்டு என்ணுக. வெம்முக வேழம் - கொடுந்தன்மையுடைய யானை.

3. பொ-ரை: மந்த சுருதியினை உடைய முழவு மழலை போல ஒலி செய்ய, மலை அடிவாரத்தில் செவ்விய தண்ணிய தோட்டங்களையும் சுனைகளையும் கொண்டுள்ள சிராப்பள்ளியில் எழுந்தருளிய அழகிய மலர்களைச் சடைமேற் சூடியவரும், விடையேற்றை ஊர்ந்து