பக்கம் எண் :

976திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


சந்தம்மலர்கள் சடைமேலுடையார்

விடையூரும்

எந்தம்மடிக ளடியார்க்கல்ல

லில்லையே. 3

1061. துறைமல்குசாரற் சுனைமல்குநீலத்

திடைவைகிச்

சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ்

சிராப்பள்ளிக்

கறைமல்குகண்டன் கனலெரியாடுங்

கடவுள்ளெம்

பிறைமல்குசென்னி யுடையவனெங்கள்

பெருமானே. 4

____________________________________________________

வருபவரும் ஆகிய எம் தலைவராகிய செல்வரை வணங்கும் அடியார்களுக்கு அல்லல் இல்லை.

கு-ரை: சிராப்பள்ளிநாதனின் அடியார்க்கு அல்லல் இல்லை என்கிறது. மந்தம் முழவம் - மந்தஸ்தாயியில் அடிக்கப்படும் முழவம் மழலை - பொருள் விளங்காத ஒலி.

4. பொ-ரை: பலவாகிய வழிகளைக் கொண்டுள்ள மலையடிவாரத்தில் விளங்கும் சுனைகளில் நெருங்கிப் பூத்த நீல மலர்களில் தங்கிச் சிறகுகளை உடைய வண்டுகளும் தும்பியும் இசைபாடும் சிராப்பள்ளியில் எங்கள் பெருமானாகிய சிவபிரான் கறை பொருந்திய கண்டத்தை உடையவனாய்க் கனலும் எரியைக் கையில் ஏந்தி ஆடும் எம் கடவுளாய்ப் பிறை பொருந்திய சென்னியை உடையவனாய் விளங்கியருள்கின்றான்.

கு-ரை: நீலகண்டன், எரியாடுங்கடவுள், பிறைச்சென்னியன் எங்கள் கடவுள் என்கின்றது.

வண்டும் தும்பியும் நீலப்பூவில் தங்கிப் பாடும் என்ற சுனையியற்கை முதல் இரண்டடிகளில் குறிக்கப் பெறுகிறது. கறை - விடம்.