1062. கொலைவரையாத கொள்கையர்தங்கண்
மதின்மூன்றும்
சிலைவரையாகச் செற்றனரேனுஞ்
சிராப்பள்ளித்
தலைவரை நாளுந் தலைவரல்லாமை
யுரைப்பீர்காள்
நிலவரைநீல முண்டதும்வெள்ளை
நிறமாமே. 5
1063. வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத்
தண்போது
செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய
செல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர்
தலையோட்டில்
ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை
யறிவாரே. 6
5. பொ-ரை: கொல்லும் தொழிலைக்
கைவிடாத கொள்கை யினராகிய அவுணர்கள்
மும்மதில்களையும் மேரு மலையை வில்லாகக் கொண்டு
அழித்தவராயினும் சிராப்பள்ளியின் தலைவராகிய
அப்பெருமானாரைத் தலைவரல்லர் என்று நாள் தோறும்
கூறிவரும் புறச்சமயிகளே! நிலவுலகில் நீலம்
உண்டதுகிலின் நிறத்தை, வெண்மை நிறமாக மாற்றல்
இயலாதது போல நீவிர் கொண்ட கொள்கையையும்
மாற்றுதல் இயலுவதொன்றோ?
கு-ரை: சிவபெருமான் முழுமுதற்
கடவுளல்லர் என்பார்க்கு உண்மை உணர்த்துவது
இப்பாடல். கொலைவரையாத கொள்கையர் - கொலையை
நீக்காத கொள்கையினை உடைய திரிபுராதிகள்.
நிலவரை நீலம் - நிலவுலகில் நீலநிறம்
ஊட்டப்பட்ட துணி. வெள்ளை நிறம் ஆமே - வெண்மை
நிறம் உடையதாதல் கூடுமோ? நீலநிறத்துக்கு மட்டும்
உரிய பண்பு இது. அதுபோல நீவிர் கொண்ட
கொள்கையையும் மாற்றல் இயலாது (பழமொழி - 168)
6. பொ-ரை: எல்லோராலும்
விரும்பத்தக்க குளிர்ந்த மலைச்சாரலில்
விரிந்த தண்ணிய பொன்னிறமான வேங்கை மலர்கள்
|