1072. பக்கம்வாழைப் பாய்கனியோடு
பலவின்தேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதூங்குங்
குற்றாலம்
அக்கும்பாம்பு மாமையும்பூண்டோ
ரனலேந்தும்
நக்கன்மேய நன்னகர்போலும்
நமரங்காள். 4
1073. மலையார்சாரன் மகவுடன்வந்த
மடமந்தி
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங்
குற்றாலம்
இலையார்சூல மேந்தியகையா
னெயிலெய்த
சிலையான்மேய நன்னகர்போலுஞ்
சிறுதொண்டீர். 5
___________________________________________________
கு-ரை: முல்லை, செண்பகம், வேங்கை
இவற்றின்மீதேறி அரும்பீனும் குற்றாலமே
திரிபுரம் எய்து அவர்கள் பாவம் தொலைத்து அருள்
வழங்கும் இறைவன் நகர் என்கின்றது. கொல்லை -
காடு.
4. பொ-ரை: மலையின் பக்கங்களில்
எல்லாம் முளைத்த வாழை மரத்தின் கனிகளோடு தேன்
ஒழுகும் பலாவின் பழங்களும் மாமரக் கிளைகளில்
பழுத்த புத்தம் புதிய நறுங்கனிகளும் ஆய
முக்கனிகளும் அவ்வம்மரங்களில் தொங்கும்
குற்றால நகர், என்புமாலை, பாம்பு, ஆமை
ஆகியவற்றைப் பூண்டு கையில் அனலை ஏந்தி
விளங்கும் சிவபிரான் மேவிய நன்னகராகும்.
கு-ரை: பக்கங்களில்
வாழைக்கனியோடு பலாப்பழத்தேனும், மாம்பழமும்
தொங்கும் குற்றாலம், அக்குமணி
முதலியவற்றையணிந்த நக்கன் நகர் என்கின்றது.
பாய்கனி - பரவிய பழம். கொக்கு - மா நக்கன் -
நக்நன் - ஆடையில்லாதவன்.
5. பொ-ரை: இறைவனுக்குக்
கைத்தொண்டு புரியுமவர்களே! தன் குட்டிகளோடு
மலையின் சாரலுக்கு வந்த மடமந்தி வாழை மரக்
குலைகளில் பழுத்த இனிய கனிகளை வயிறு புடைக்கத்
தின்னும்
|