பக்கம் எண் :

 99. திருக்குற்றாலம்985


1074. மைம்மாநீலக் கண்ணியர்சாரன்

மணிவாரிக்

கொய்ம்மாவேன லுண்கிளியோப்புங்

குற்றாலம்

கைம்மாவேழத் தீருரிபோர்த்த

கடவுள்ளெம்

பெம்மான்மேய நன்னகர்போலும்

பெரியீர்காள். 6

1075. நீலநெய்தல் தண்சுனைசூழ்ந்த

நீள்சோலைக்

கோலமஞ்ஞை பேடையொடாடுங்

குற்றாலம்

__________________________________________________

குற்றாலம். இலை வடிவமான சூலத்தை ஏந்திய கையினனும், மும்மதில்களையும் எய்து அழித்த வில்லாளனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

கு-ரை: குட்டியுடன் வந்த தாய்க்குரங்கு வாழைப்பழத்தை உண்ணும் குற்றாலம், திரிபுரம் எரித்த சிவபெருமான் மேய நகர் என்கின்றது. மாந்தும் - தின்னும்.

6. பொ-ரை: பெரியீரே! மிக்க கரிய பெரிய நீலமலர் போன்ற கண்களை உடைய குறமகளிர், மலைச்சாரல்களில் விளைந்த தினைப் புனங்களில் கொய்யத்தக்க பருவத்திலுள்ள பெரிய தினைக்கதிர்களை உண்ண வரும் கிளிகளை அங்குள்ள மணிகளை வாரி வீசியோட்டும் குற்றாலம், கைம்மா எனப்பெறும் யானையின் தோலைப் போர்த்த கடவுளும் எம் தலைவனுமாகிய சிவபிரான் எழுந்தருளியுள்ள நன்னகராகும்.

கு-ரை: நீலமலர் போலுங் கண்ணையுடைய குறத்தியர் மாணிக்கத்தைக் கொண்டு கிளியோட்டுங் குற்றாலம், யானையுரி போர்த்த நாதன் நகர் என்கின்றது, மை மா நீலம் - மிகக்கரிய நீலமலர். கொய் மா ஏனல் - கொய்யும் பருவத்திலுள்ள பெரிய தினை. ஓப்பும் - ஓட்டும். கைம்மாவேழம் - கையையுடைய விலங்காகிய யானை.

7. பொ-ரை: தொழுது வணங்கும் அடியவர்களே! நீலமலரும் நெய்தல் மலரும் பூத்த தண்ணியவான சுனைகள் சூழ்ந்ததும், நீண்டு