பக்கம் எண் :

986திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


காலன்றன்னைக் காலாற்காய்ந்த

கடவுள்ளெம்

சூலபாணி நன்னகர்போலுந்

தொழுவீர்காள். 7

1076. போதும்பொன்னு முந்தியருவி

புடைசூழக்

கூதன்மாரி நுண்துளிதூங்குங்

குற்றாலம்

மூதூரிலங்கை முட்டியகோனை

முறைசெய்த

நாதன்மேய நன்னகர்போலுந்

நமரங்காள். 8

___________________________________________________

வளர்ந்துள்ள சோலைகளில் அழகிய ஆண் மயில்கள் தத்தம் பெண் மயில்களோடு களித்தாடுவதுமாகிய குற்றாலம், காலனைக் காலால் கடிந்த கடவுளும் சூலத்தைக் கையில் - ஏந்தியவனுமாகிய எம் சிவபிரான் எழுந்தருளியள்ள நன்னகராகும்.

கு-ரை: சுனைசூழ்ந்த சோலையிலே மயில் பெடையோடு விளையாடும் குற்றாலம், காலகாலனாகிய சூலபாணியின் நகர் என்கின்றது.

கோல மஞ்ஞை - அழகிய மயில்.

8. பொ-ரை: நம்மவர்களே! அருவிகள் மலர்களையும் பொன்னையும் உந்திவந்து இரு புறங்களிலும் குளிர்ந்த மழை போல் நுண்மையான துளிகளை உதிர்க்கும் குற்றாலம், தன் தகுதிக்கு மேலே செயற்பட்ட இலங்கை நகரின் புகழ் பெருக்கி ஆளும் அரசனாகிய இராவணனைத் தண்டித்த சிவபிரான் எழுந்தருளிய நல்ல நகராகும்.

கு-ரை: பூக்களையும் பொன்னையும் உந்தி அருவி புடைசூழ நுண்துளி வீசுங் குற்றாலம் இலங்கை நாதனையடக்கிய இறைவன் நகர் என்கின்றது.

மீதூர் எனவும் பாடம். கூதல் மாரி - குளிர்ந்த மழை.