பக்கம் எண் :

 100. திருப்பரங்குன்றம்989


100. திருப்பரங்குன்றம்

பதிக வரலாறு:

மதுரையை வழிபட்டுப் பிற தலங்களையும் வழிபடத் திருவுளங் கொண்டருளியபோது நெடுமாறனும், மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் மனங்கவல, பிள்ளையார் ‘நீங்கள் கவலாதொழிவீர்களாக; உங்களைப் பிரியாதவண்ணம் இந்நாட்டுப் பிறபதிகளையும் தரிசிக்க எண்ணினோம்‘ என்றார். அவர்கள் மகிழ்ந்து உடன்போத, திருப்பரங்குன்றையடைந்து ஆறணிந்தார் அடிகளைப் போற்றி "நீடலர் சோதி" என்னும் இப்பதிகத்தை அருளிச் செய்தார்கள்.

பண் : குறிஞ்சி

பதிக என் ;100

திருச்சிற்றம்பலம்

1080. நீடலர்சோதி வெண்பிறையோடு

நிரைகொன்றை

சூடலனந்திச் சுடரெரியேந்திச்

சுடுகானில்

ஆடலனஞ்சொ லணியிழையாளை

யொருபாகம்

பாடலன்மேய நன்னகர்போலும்

பரங்குன்றே. 1

___________________________________________________

1. பொ-ரை: நீண்டு விரிந்த ஒளிக்கதிர்களை உடைய வெண்பிறையோடு வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையைச் சூடுதலை உடையவன். அந்திப் போதில் ஒளியோடு கூடிய எரியை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவன். அழகிய சொற்களைப் பேசும் அணிகலன்களோடு கூடிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு பாடுபவன். அத்தகைய பெருமானது நல்லநகர் பரங்குன்று.

கு-ரை: பிறை, கொன்றை இவைகளைச் சூடியவனும், எரியேந்தியும், இடுகாட்டில் நட்டமாடுபவனும், உமாதேவியாரை ஒரு பாகம் வைத்து ஆடுபவனும் ஆகிய இறைவன் எழுந்தருளியுள்ள