1079. மாடவீதி வருபுனற்காழி
யார்மன்னன்
கோடலீன்று கொழுமுனைகூம்புங்
குற்றாலம்
நாடவல்ல நற்றமிழ்ஞான
சம்பந்தன்
பாடல்பத்தும் பாடநம்பாவம்
பறையுமே. 11
திருச்சிற்றம்பலம்
___________________________________________________
என்கின்றது. எடுத்து ஆர்ப்ப
அருந்தண்மேய - சமணர் புத்தர்கள் எடுத்து
நுகர்தற்கரிய தண்மையான இறைவன் மேவிய. தண் -
தண்மை; பண்பு தண்மையையுடைய இறைவனைக் காட்டி
நின்றது.
11. பொ-ரை: மாடவீதிகளையுடையதும்
ஆற்று நீர்வளம் மிக்கதுமான சீகாழிப் பதிக்கு
மன்னனும் பலராலும் நாட வல்லவனுமான நற்றமிழ்
ஞானசம்பந்தன் செங்காந்தள் மலர்களை ஈன்று
அவற்றின் கொழுவிய முனையால் கை குவிக்கும்
குற்றாலத்து இறைவர் மேல் பாடிய பாடல்கள்
பத்தையும் பாடப் பாவம் நீங்கும்.
கு-ரை: குற்றாலத்தைப்பற்றி
ஞானசம்பந்தன் சொன்ன பாடல் பத்தும் வல்லார்
பாவம் பறையும் என்கின்றது. கோடல் -
செங்காந்தள், கொழுமுனை கூம்பும் - கொழுமையான சிகரம்
கூம்பியுள்ள.
சோணசைலமாலை
கூம்புறு
கரமும் மலர்ந்திடு முகமும்
கொண்டுநின்றனைவலம்
புரிவோர்
மேம்படு சரண
மலர்ப்பொடி மேனி
மேற்படிற்
பவம்பொடி படுமே
பூம்பொழிற்
புகலிக்கிறைவனா னிலஞ்சேர்ப்
புண்ணியத்
தலங்களி னடைந்து
தாம்புனை
பதிகந் தொறும்புகழ் சோண
சைலனே
கைலைநாயகனே.
- சிவப்பிரகாச சுவாமிகள்.
|
|