பக்கம் எண் :

 100. திருப்பரங்குன்றம்991


1083. வளர்பூங்கோங்க மாதவியோடு

மல்லிகைக்

குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப்

பரங்குன்றம்

தளிர்போன்மேனித் தையனல்லாளோ

டொருபாகம்

நளிர்பூங்கொன்றை சூடினன்மேய

நகர்தானே. 4

1084. பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம்

புரிசடைத்

துன்னியசோதி யாகியவீசன்

றொன்மறை

____________________________________________________

கொண்டுள்ள உமையம்மையோடும் உடனாய்ப் பூதகணங்கள் பாட இனிதாக உறைவும் கோயில் திருப்பரங்குன்றம்.

கு-ரை: கங்கை சூடிய திருச்சடையில் கொன்றையையணிந்த எம்மிறைவன் உறைகோயில் பரங்குன்றுபோலும் என்கின்றது. நீர் - கங்கை. நிரை கொன்றை - மாலையாகப் பூக்கும் கொன்றை. பாரிடம் - பூதம்.

4. பொ-ரை: வளர்ந்துள்ள கோங்கு முதலிய மரங்களும், மணம் தரும் மாதவி முதலிய செடிகளும், மல்லிகை முதலிய கொடிகளும் நிறைந்துள்ள வண்டுகள் முரலும் சோலைகள் சூழ்ந்த சாரலை உடைய திருப்பரங்குன்றம், ஒரு பாகமாகிய தளிர் போன்ற மேனியளாகிய தையல் நல்லாளோடு பொருந்திக் கொத்தாகச் செறிந்த பூக்களைக் கொண்ட கொன்றை மலர் மாலையை அணிந்தவனாகிய சிவபிரானது நகராகும்.

கு-ரை: கோங்கம் மாதலி மல்லிகை இவைகள் செறிந்த சாரலையுடைய பரங்குன்றம், பெண்ணொருபாகன் பேணிய நகராம் என்கின்றது. இவன் போகியாதற்கேற்பக் குன்றமும் மல்லிகை முதலிய மணந்தரும் பூக்கள் மலிந்துள்ளமையும், புணர்ச்சி நலமிகும் சாரலோடு கூடியமையும் குறிக்கப் பெற்றன.

5. பொ-ரை: பொன் போன்ற கொன்றை மலர், பொறிகள் விளங்கும் பாம்பு ஆகியவற்றை அணிந்துள்ள முறுக்கேறிய சடைமுடியோடு