பன்னியபாட லாடலன்மேய
பரங்குன்றை
உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை
யுறுநோயே. 5
1085. கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங்
கனன்மூழ்கத்
தொடைநவில்கின்ற வில்லினனந்திச்
சுடுகானில்
புடைநவில்பூதம் பாடநின்றாடும்
பொருசூலப்
படைநவில்வான்ற னன்னகர்போலும்
பரங்குன்றே. 6
____________________________________________________
பொருந்திய ஒளி வடிவினனாகிய ஈசனும்,
பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப்
பாடி ஆடுபவனுமாகிய சிவபிரான் எழுந்தருளிய
திருப்பரங்குன்றை எண்ணிய சிந்தை உடையவர்க்கு
மிக்க நோய்கள் எவையும் இல்லை.
கு-ரை: சோதி வடிவாகிய ஈசனும்
வேதம் அருளிச் செய்தவனும் ஆகிய நட்டமாடியின்
பரங்குன்றைத் தியானிப்பவர் கட்கு நோயில்லை
என்கின்றது. பொறி - படப்பொறி. உன்னிய -
தியானித்த. உறுநோய் - மிக்கநோய்.
6. பொ-ரை: வாயிலை உடைய காவல்
பொருந்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும்
கனலில் மூழகுமாறு அம்பினை எய்த வில்லினனும்,
அந்திக் காலத்தில் சுடுகாட்டில் அருகில் தன்னொடு
பழகிய பூதகணங்கள் பாட நின்றாடுபவனும்
போர்க்கருவியாகிய சூலப்படையை ஏந்தியவனுமாகிய
சிவபிரானது நன்னகர் திருப்பரங்குன்றம்.
கு-ரை: திரிபுரம் எரிய
அம்புதொடுத்த வில்லினனும், பூதம் பாட இடுகாட்டில்
நடமாடும் சூலபாணியுமாகிய இறைவன் நகர் பரங்குன்று
என்கின்றது.
கடி அரண் - காவலோடு கூடிய அரண். தொடை -
அம்பு, புடை - பக்கம். நவில்வான் - விரும்பியவன்.
|