1086. அயிலுடைவேலோ ரனல்புல்குகையி
னம்பொன்றால்
எயில்படவெய்த வெம்மிறைமேய
விடம்போலும்
மயில்பெடைபுல்கி மாநடமாடும்
வளர்சோலைப்
பயில்பெடைவண்டு பாடலறாத
பரங்குன்றே. 7
1087. மைத்தகுமேனி வாளரக்கன்றன்
மகுடங்கள்
பத்தினதிண்டோ ளிருபதுஞ்செற்றான்
பரங்குன்றைச்
சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச்
சிவனென்று
நித்தலுமேத்தத் தொல்வினை நம்மேல்
நில்லாவே. 8
____________________________________________________
7. பொ-ரை: கூரிய வேற்படையை
உடையவனும், அனல் தழுவிய கை அம்பு ஒன்றால்
மூவெயில்களை எய்து அழித்தவனும் ஆகிய எம் இறைவன்
மேவிய இடம், ஆண் மயில்கள் பெண் மயில்களைத்
தழுவிச் சிறந்த வகையில் நடனம் ஆடும் வளர்ந்த
சோலைகளில் பெண் வண்டுகளோடு கூடிய ஆண் வண்டுகள்
இடையறாது இசை பாடும் சிறப்புடைய
திருப்பரங்குன்றாகும்.
கு-ரை: எறியம்பு ஒன்றால் எயில்
எய்த இறைவன் எழுந்தருளியுள்ள இடம் பரங்குன்று
என்கின்றது. அயில் - கூர்மை. பட - அழிய. ஆண்மயில்
தன்னுடைய பெடையைத் தழுவிக் கொண்டு நடமாடும்
சோலையிலே, பெடையோடு கூடிய வண்டுகள் பாடுகின்றன
என்பதால் இன்பமயமாதல் எடுத்துக்
காட்டப்பெற்றது.
8.பொ-ரை: மை எனத்தக்க கரிய
மேனியனாகிய வாட் போரில் வல்ல இராவணனின்
மகுடம் பொருந்திய பத்துத் தலைகளையும் இருபது
தோள்களையும் அடர்த்த சிவபிரான் எழுந்தருளிய
திருப்பரங்குன்றை ஒன்றிய மனத்துடன் அங்குள்ள
பெருமானின்
|