பக்கம் எண் :

994திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1088. முந்தியிவ்வையந் தாவியமாலு

மொய்யொளி

உந்தியில்வந்திங் கருமறையீந்த

வுரவோனும்

சிந்தையினாலுந் தெரிவரிதாகித்

திகழ்சோதி

பந்தியலங்கை மங்கையொர்பங்கன்

பரங்குன்றே. 9

1089. குண்டாய்முற்றுந் திரிவார்கூறை

மெய்போர்த்து

மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு

மெய்யல்ல

___________________________________________________

சேவடிகளைச் சிந்தித்துச் சிவனே என்று நித்தலும் ஏத்தித் துதிக்க, வினைகள் நம் மேல் நில்லா.

கு-ரை: பரங்குன்றைச் சிவபெருமானே என்றெண்ணி மனம் ஒன்றி நாள்தோறும் வழிபட நமது வினைகள் அழியும் என்கின்றது. மைத்தகுமேனி வாள் அரக்கன் - கரியமேனியை உடைய கொடிய அரக்கன்; என்றது இராவணனை.

9. பொ-ரை: மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் தந்த அளவில் முந்திக் கொண்டு இவ்வுலகை ஓரடியால் அளந்ததுடன் வானுலகங்களையும் ஓரடியால் அளந்த திருமாலும், அத் திருமாலின் ஒளி நிறைந்த உந்திக் கமலத்தில் தோன்றி அரிய மறைகளை ஓதும் நான் முகனும் மனத்தாலும் அறிய முடியாதவாறு பேரொளிப் பிழம்பாய் நின்ற சோதி வடிவினனும், விளையாடும் பந்து தங்கிய அழகிய கையை உடைய மங்கையை ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய சிவபிரான் எழுந்தருளிய தலம் திருப்பரங்குன்று.

கு-ரை: அயனம் மாலும் மனத்தாலும் அறியமுடியாத சோதி வடிவாகிய இறைவனது பரங்குன்று இது என்கின்றது. உந்தி - கொப்பூழ். உரவோன் - அறிஞன்; என்றது பிரமனை. பந்து இயல் அங்கை - மங்கைக்கு அடை.

10. பொ-ரை: பருத்த உடலினராய் எங்கும் திரியும் சமணரும், ஆடையை உடலிற் போர்த்துத் திரியும் புத்தரும் தர்க்க வாதத்துடன்