பக்கம் எண் :

 101. திருக்கண்ணார்கோயில்995


பண்டானீழன் மேவியவீசன்

பரங்குன்றைத்

தொண்டாலேத்தத் தொல்வினை நம்மேல்

நில்லாவே. 10

1090. தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான

சம்பந்தன்

படமலிநாக மரைக்கசைத்தான்றன்

பரங்குன்றைத்

தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந்

துயர்போகி

விடமலிகண்ட னருள்பெறுந்தன்மை

மிக்கோரே. 11

திருச்சிற்றம்பலம்

___________________________________________________

மிடுக்காய்ப் பேசும் பேச்சுக்கள் எவையும் உண்மையல்ல. முற்காலத்தில் கல்லால மர நிழலில் வீற்றிருந்து அறம் நால்வர்க்கருளிய ஈசனது பரங்குன்றைத் தொண்டுசெய்து ஏத்தினால் நம் தொல்வினை நம்மேல் நில்லாது கழியும்.

கு-ரை: புத்தரும் சமணரும் கூறுவன மெய்யில்லாதன; ஆதலால் பரங்குன்று ஈசன் பாதத்தைப் பணி செய்து தொழவே பழவினை பறக்கும் என்கின்றது. குண்டாய் - பருத்த உடலராய். மிண்டர் - வழக்குரைப்பார். பண்டு ஆல் நீழல் மேவிய எனப்பிரிக்க.

11. பொ-ரை: பரப்புமிக்க பொய்கையை உடைய சண்பை என்னும் சீகாழிப் பதியின் மன்னனாகிய ஞானசம்பந்தன் படத்தோடு கூடிய பாம்பை இடையில் கட்டிய பரங்குன்றிறைவர் மீது பாடிய தொடை நயம் மிக்க பாடல்கள் பத்தையும் ஓதி வழிபட வல்லவர் தம் துன்பம் நீங்கி விடமுண்ட கண்டனாகிய சிவபிரானின் அருள்பெறும் தகுதியில் மேம்பட்டவராவர்.

கு-ரை: ஞானசம்பந்தன் சொன்ன பரங்குன்றப் பாடல் பத்தும் வல்லவர் தம்முடைய துன்பம் எல்லாம் தொலைந்து நீலகண்டனது அருளைப் பெறும் தகுதி உடையோராவர்.