பக்கம் எண் :

998திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1094. தருவளர்கானந் தங்கியதுங்கப்

பெருவேழம்

மருவளர்கோதை யஞ்சவுரித்து

மறைநால்வர்க்

குருவளரால நீழலமர்ந்தீங்

குரைசெய்தார்

கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர்

கற்றோரே. 4

____________________________________________________

கல்லால் இயன்ற வானளாவிய மதில்களில் மேகங்கள் அமர்ந்திருப்பதுமாகிய கண்ணார்கோயில் என்னும் தலமாகும் என்பர்.

கு-ரை: பூதம் ஏத்த இரவில் நடஞ்செயும் ஈசன் இடம் இது என்பர். பல்லியல் பாணி - பலவாகிய இயல்பினையுடைய பாட்டு.

எல்லி - இரவு. கொல்லை - முல்லைநிலம். மௌவல் - காட்டுமல்லிகை. கல்லியல் இஞ்சி - கல்லால் இயன்ற மதில். மஞ்சு - மேகம்.

4. பொ-ரை: மரங்கள் செழித்து வளர்ந்துள்ள காட்டில் வாழ்ந்த உயர்ந்த பெரிய யானையை, மணம் பொருந்திய மலர்மாலையை அணிந்துள்ள உமையம்மை அஞ்சுமாறு உரித்தவரும், அடர்ந்த பசுமை நிறம் பொருந்தி உயர்ந்து வளர்ந்துள்ள கல்லால மர நிழலில் அமர்ந்து வேதங்களின் உட்பொருளைச் சனகாதி முனிவர்க்கு இவ்வுலகத்தே உரை செய்து உணர்த்தியவருமாகிய சிவபெருமான் கருவரையில் தங்கியிருக்கின்ற கோயிலை அடைந்தவர்கள் முழுமையான கல்வியறிவின் பயனை அடைந்தோராவர்.

கு-ரை: உமையாள் அஞ்ச காட்டானையை உரித்துப் போர்த்தியும் சனகாதியர்க்கு உபதேசித்தும் அமர்ந்து பெருமானது கண்ணார் கோயிலையடைந்தவர்கள் கற்றவர்கள் என்கின்றது.

துங்கம் - உயர்ச்சி. வேழம் - யானை, மருவளர்கோதை - மணம்மிக்க மாலை போல்வாளாகிய உமாதேவி. நால்வார்க்கு - சனகாதியர்களுக்கு. உரு வளர் ஆலம் - தெய்வத்தன்மையாகிய அச்சம் வளர்கின்ற ஆலமரம். உரு - வடிவமுமாம்.