பக்கம் எண் :

 101. திருக்கண்ணார்கோயில்999


1094. தருவளர்கானந் தங்கியதுங்கப்

பெருவேழம்

மருவளர்கோதை யஞ்சவுரித்து

மறைநால்வர்க்

குருவளரால நீழலமர்ந்தீங்

குரைசெய்தார்

கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர்

கற்றோரே. 4

1096. விண்ணவருக்காய் வேலையுணஞ்சம்

விருப்பாக

உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ்

வுலகிற்கும்

___________________________________________________

5. பொ-ரை: வஞ்சகம் பொருந்திய மனத்தோடு பெரிய உருவம் உடையவனாய், தனக்கு ஒப்பார் இல்லாதவனாய், தேவர்களைத் துன்புறுத்திய மாவலி என்ற அரக்கர் குல மன்னனிடம் சென்று அவனிடம் மூன்றடி மண் கேட்டு எல்லா உலகங்களையும் தனக்கே உரியவாய் அளவிட்டு அளந்த குள்ளமான பிரமசாரிய வடிவுடைய வாமனன், சிவபெருமானது வடிவாகத் தாபித்து வழிபட, அவனுக்கு அருள் செய்த நீல மறுப் பொருந்திய கண்டனாகிய சிவபிரான் மேவிய ஊர், கண்ணார் கோயிலாகும்.

கு-ரை: மாவலியை வென்ற குறளனாகிய திருமால் வழிபட்ட இறைவன் எழுந்தருளியுள்ள இடம் கண்ணார்கோயில் என்கின்றது. மறு மாண் உருவாய் - குற்றம் பொருந்திய பெரிய வடிவமாய். செறும் - வருத்துகின்ற. குறுமாண் உருவன் - குறுகிய பிரமசாரி வடிவத்தை எடுத்த திருமால். தற்குறியாக - சிவபெருமானின் அடையாளமாக. கறுமா கண்டன் - கறுத்த பெரிய கழுத்தினை உடையவன். இத்தலத்திற்குப் பக்கத்தில் குறுமாணகுடி என்ற கிராமமும் இருப்பது அறிஞர்கள் அறிந்து இன்புறுதற்குரியது.

6. பொ-ரை: விண்ணவர்களைக் காத்தற் பொருட்டுக் கடலுள் தோன்றிய நஞ்சினை விருப்போடு உண்டவனை, தேவர்களுக்கு அமுதம் அளித்து எவ்வுலகிற்கும் பற்றுக்கோடாய் விளங்குபவனை, விளக்கமான கண்ணார் கோயிலுள் விளங்கும் கனி போல்பவனை நண்ணி