2532.
|
துறக்குமா
சொலப்படாய்
துருத்தியாய் திருந்தடி
மறக்குமா றிலாதவென்னை
மையல்செய்திம் மண்ணின்மேல்
பிறக்குமாறு காட்டினாய்
பிணிப்படு முடம்புவிட்
டிறக்குமாறு காட்டினாய்க்
கிழுக்குகின்ற தென்னையே.
5
|
பிள்ளையார் காலத்துக்கும்
முன்பே, பகலில் துருத்திவாசமும் இரவில்
வேள்விக்குடிவாசமும் உண்டு என்ற வரலாறு வழங்கப் பட்டமை விளங்கும்.
இவை இல்லையேல் இரண்டு தலங்களையும் ஒருங்கு பாடார் என்க.
‘வட்டக்குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார். அட்டக்கொண்
டுண்பதறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோம்’ என்றதில் ‘வேள்விக்குடி’
என்னும் பெயர்க்காரணம் உள்ளதறிக. மான்தோல் உடுத்துப் புலித்தோல்
பியற்கும் இட்டு யானைத்தோல் ஒன்றை போர்ப்பதறிந்தோமெனில் நாம்
இவர்க்கு ஆட்படோம் 7. என்பதில் துருத்தியோகியை
நினைவூட்டினாரென்பர்.
5. பொ-ரை:
திருத்துருத்தியில் எழுந்தருளிய இறைவனே! பகலில்
யோகியாய்த் திருத்துருத்தியிலும், இரவில் மணவாளக் கோலத்தோடு
வேள்விக் குடியிலும் எழுந்தருளியுள்ள நீ, துறக்கும் உபாயத்தைக் கூறினீர்
இல்லை. அழகிய திருவடியின்பத்தில் திளைத்து அதனை மறவாதிருந்த
என்னை மயக்குறுத்திடும் மண்ணுலகில் பிறக்குமாறும், நோய்க்கு இடமான
இவ்வுடம்பை விடுத்து இறக்குமாறும் செய்தருளினாய். யான் உனக்குச்
செய்த இழுக்கு யாதோ? சொல்வாயாக.
கு-ரை:
துருத்தியில் எழுந்தருளிய முதல்வனே, பகலில் துறவி போல
வேடங்கொண்டு இரவில் வேள்விக்குடியில் மணவாளக் கோலம்பூண்டு,
தழும்பும் உற இணை விழைச்சுடையாய்; துறக்கும் ஆறு சொல்லப்படாய்,
உன் திருந்திய திருவடிகளை மறக்கும் மாறுபாடு சிறிதும் இல்லாத என்னை,
மையல்செய்து, இம்மண்ணுலகில் பிறக்குமாறு காட்டியளினை. நோய்களுக்கு
இடமாகும். உடம்பைத் தவிர்த்து, இறக்குமாறு காட்டியருளினை; இவ்வாறு
பிறப்பும் இறப்பும் நீ காட்ட நான் உனக்குச்செய்த இழுக்கு யாது? மறக்கும்
ஆறு எனலும் உண்டு. நான்கடியிலும் ஆறு என்றே கொள்ளல் ஏலாததன்று.
‘பிணிப்படும் உடம்பு’-‘இடும்பைக் கிடும்பை’ (மூதுரை) என்றதுணர்க.
|