2531.
|
கருத்தினாலொர்
காணியில்
விருத்தியில்லை தொண்டர்தம்
அருத்தியாற்றம் மல்லல்சொல்லி
யையமேற்ப தன்றியும்
ஒருத்திபால் பொருத்திவைத்
துடம்புவிட்டு யோகியாய்
இருத்திநீ துருத்திபுக்
கிதென்னமாய மென்பதே. 4 |
வெண்குழை தொங்கும்
காதினையும், பொங்கி விளங்கும் பூணநூலையும்
உடைய உருத்திரமூர்த்தியே! எல்லா இடங்களும் உன் இடங்களாக இருக்க,
திருத்துருத்தி என்ற இத்தலத்தில் புக்கு அடங்கி வாழ்தற்குக் காரணம்
யாதோ?
கு-ரை: பூணூல் உருத்திரா-முப்புரி
நூலைப்பூண்ட உருத்திர
மூர்த்தியே. துருத்திபுக்கு எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்தல்
என்கொல்- புக்கது துருத்தியாயினும் எல்லா இடங்களும் சிவப்பிரகாசத்தால்
உன் நிறைவையே உணர்த்துகின்றன. அவ்வாறு ஓரிடத்திருந்து பலவிடத்தும்
காட்சி தரும் ஆற்றல் இருந்தவாறென்னே! என்றபடி, துருத்தியில் இன்றும்
அத்திருக் கோயில் பொலிவு அத்தலம் முழுதும் விளங்கக் காணலாம்.
4. பொ-ரை: கருதுமிடத்து ஒரு காணி நிலத்தில்
பயிரிட்டு வரும்
வருவாயும் உனக்கு இல்லை. தொண்டர்கள்மேல் உள்ள ஆசையால் தம்
அல்லல் சொல்லி ஐயம் ஏற்கின்ற தன்றி, ஒரு பெண்ணைத் தன் உடம்பின்
ஒரு பாகத்தே கொண்டிருந்தும் உடம்பின்மேல் உளதாம் பற்றை விடுத்து
யோகியாய் இருந்து திருத்துருத்தியில் புகுந்து எழுந்தருளி யிருத்தற்குரிய
மாயம் யாதோ?
கு-ரை: (பா. 8 பார்க்க). யோகியாயிருந்த
உண்மை உணர்த்தியவாறு
ஒருகாணி நிலம் உடையவனாகி, அதிற் பயிரிட்டு ஜீவனம் புரிதல் இல்லை.
தம் வறுமைத்துன்பம் உரைத்துப் பிச்சை எடுப்பது, பகலிடம் புகலிடம். . .
துருத்தியார், இரவிடத் துறைவர் வேள்விக் குடியே என்று முதலிற்
கூறியதுமன்றிப் பாடல்தொறும் அதனைத் தெரிவித்திருப்பதாலும் (தி.3 ப.90
பா.1.) ஒருத்திபால் பொருத்திவைத்து உடம்பு விட்டுத் துருத்திபுக்கு இருத்தி,
இது என்னமாயம் என்பதோ? என்று இங்கு வினாவியதாலும் காப்பது
வேள்விக்குடி தண்துருத்தி யெங் கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்
என்றதாலும் ஆளுடைய
|